25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
cats 785
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரககற்கள் நிரந்தரதீர்வு மற்றும் ஆச்சரியப்படுத்தும் மருத்துவகுணங்கள்

கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்து பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.

நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

கோவைக்காய் இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெய்யுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.

கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.சிறுநீரக கற்கள் தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீர் அருந்துவது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது.வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

உடல் எடை உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காய் பதார்த்தங்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.சர்க்கரை வியாதி ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவு பழக்கங்களாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.

கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும். இதயம் ஒரு வயதிற்கு மேலே அனைவருக்கும் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்டுகிறது.

இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

Related posts

நிமோனியாவை தடுத்து நிறுத்துவோம்!

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய எளிய மருந்து..!

nathan

அல்சர் பிரச்சனைக்கான கிராமத்து வைத்தியம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

நீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்!சூப்பர் டிப்ஸ்

nathan

உங்க குழந்தைக்கு சளி, இருமல், காய்ச்சலா? அப்ப உடனே இத படிங்க…

nathan

தெரிந்துகொள்வோமா? டெங்குக் காய்ச்சலின்போது உணவின் முக்கியத்துவம் என்ன?

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்கும் வழிமுறைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…புகைப்பிடிப்போரின் அருகில் கர்ப்பிணிகள் இருந்தால், அது குழந்தையை எப்படி பாதிக்கிறது?

nathan