28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
0200609235217
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…காலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டிய சாப்பிடக்கூடாத பானங்கள் என்ன தெரியுமா.?

நீராகாரம்: காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒரு முக்கியமான பழக்கம். இதனால் உடலுக்குக் குளிர்ச்சியும் தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது.
நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது. உடலுக்கு அதிக குளிர்ச்சியை தரக்கூடியது இந்த நீராகாரம்.
நெல்லி சாறு: தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிக அளவில் கிடைக்கும்.

இதில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும் சிறந்தது.
சிறுநீரகத் தொற்று நோய்களுக்கும் இது சிறந்த ஒரு மருந்து. இதில் சிறிதளவே அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. அதனால் இதை எல்லா வயதினரும் வெறும் வயிற்றில் தாராளமாக குடிக்கலாம்.
இளநீர்: இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் நீங்கள் இதை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால் தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கக் கூடிய நம்முடைய வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும் வெறும் வயிற்றில் குடிக்கும்போது இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். உணவு இடைவேளையில் தான் இளநீர் அருந்த வேண்டும். அதுவும் வெட்டிய உடன் குடித்துவிட வேண்டும். இல்லையென்றால் வயிற்று பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
எலுமிச்சை சாறு: காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றுடன் தேன் மற்றும் வெந்நீர் கலந்து குடித்தால் உடல் எடையை குறைக்கும் என பலரும் நினைக்கிறார்கள். இதனால் எடை குறைந்தாலும் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு அருந்துவது அவ்வளவு நல்லதல்ல.
எலுமிச்சையில் அதிகமாக இருக்கும் சிட்ரிக் அமிலம் நம்முடைய வயிற்றில் சுரக்கக்கூடிய ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும். ஆனால் தேன் மற்றும் வெந்நீர் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் உடல் எடை குறைவதுடன் வயிற்றின் அமிலத் தன்மையும் சமன் செய்யப்படுகிறது. எனவே எலுமிச்சை சேர்க்காமலேயே எளிதாக எடையைக் குறைக்கலாம்.

Related posts

சூப்பரான வாழைத்தண்டு வெந்தயக்கீரை பொரியல்

nathan

சுவையான ஸ்பெஷல்: பாசுந்தி

nathan

தெரிஞ்சிக்கங்க… குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகளை கொடுப்பது நல்லதா கெட்டதா ?

nathan

சேப்பங்கிழங்கில் உள்ள மருத்துவ பயன்கள்

nathan

உங்களுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்போ இதை படிங்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஏழே நாட்களில் உடல் எடை குறைக்கனுமா? இந்த அற்புத பானங்கள் தினமும் குடிங்க

nathan

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்

nathan

உடலுக்கு எமனாகும் பரோட்டா

nathan

இதயத்தை பலப்படுத்தும் சுக்கான் கீரை

nathan