25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 1
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…மாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா??

உலகில் அதிகளவு மக்களால் சாப்பிடப்படும் முக்கியமான பழங்களில் ஒன்று மாதுளையாகும். இதன் சுவை மட்டுமின்றி இதன் மருத்துவ குணங்களுக்குகாக இதனை சாப்பிடுபவர்கள் ஏராளம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு அளப்பறியா நன்மைகளை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாதுளையால் சில ஆபத்துக்களும் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான். மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

அலர்ஜிகள்
இது மாதுளையின் முக்கியமான பக்க விளைவுகளில் ஒன்றாகும். இது அரிதாக ஏற்பட்டாலும், மாதுளை அலர்ஜிகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. மாதுளையால் அலர்ஜிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அரிப்பு, வீக்கம், தொண்டையில் எரிச்சல், வயிற்று வலி மற்றும் படை நோய் ஆகியவை இதன் அறிகுறிகளில் அடங்கும். சில சந்தர்ப்பங்களில், ஒருவர் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம், தொண்டை மற்றும் நாக்கின் வீக்கம் மற்றும் அனாபிலாக்டிக் பிரச்சினையைக் கூட அனுபவிக்கலாம். சில ஆய்வுகளில் காதுகளில் கூட வீக்கம் ஏற்படலாம், மாதுளை சாப்பிட்ட10 நிமிடத்தில் அரிப்பு தொடங்கினால் மருத்துவரை அணுகுவது நல்லது.

சில மருந்துகளின் குறுக்கீடு
இது மற்றொரு முக்கியமான பக்க விளைவாகும். மாதுளை சில மருந்துகளுடன் குறுக்கீடு செய்து சில விரும்பத்தகாத பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அமிட்ரிப்டைலைன் (எலவில்), டெசிபிரமைன் (நோர்பிராமின்), ஃப்ளூக்ஸெடின் (புரோசாக்), ஒன்டான்செட்ரான் (ஜோஃப்ரான்), டிராமடோல் (அல்ட்ராம்), ரோசுவாஸ்டாடின் (க்ரெஸ்டர்) போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது மாதுளை சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், ஏ.சி.இ இன்ஹிபிட்டர்கள் (கபோடென், வாசோடெக், பிரின்வில், அல்டேஸ், ஜெஸ்ட்ரில், முதலியன) மற்றும் ஆண்டிஹைபர்டென்சிவ் மருந்துகள் (தியோவன், கோசார், கார்டிஸெம், லேசிக்ஸ்) போன்றவற்றுடனும் மாதுளை குறுக்கீடு செய்யும். உயர் இரத்த அழுத்த மருந்துகள் சாப்பிடுபவர்கள் மாதுளை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

இரத்த அழுத்தத்தை அதிகம் குறைக்கும்
மாதுளை இரத்த அழுத்த அளவைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு நல்லது, ஆனால் அனைவருக்கும் இது நல்லதல்ல. ஆனால் குறைந்த இரத்த அழுத்தம் அல்லது இரத்த அழுத்த அளவுகளில் கட்டுப்பாடற்ற ஏற்ற இறக்கங்கள் உள்ளவர்கள் மாதுளம்பழங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அறுவை சிகிச்சையின் போது மாதுளை சிக்கல்களை ஏற்படுத்த இதுவே காரணமாகும். நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தால் அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பிருந்து மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

கர்ப்பகால சிக்கல்கள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் முதலில் தேடுவது மாதுளையைதான். ஏனெனில் இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. மாதுளை சாறு கர்ப்ப காலத்தில் அவசியமான ஒன்றாக இருந்தாலும் அதனை மற்ற வழிகளில் எடுத்துக்கொள்வது சற்று ஆபத்தானதுதான். அலர்ஜிகள் இருந்தால் இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, குறிப்பாக இதன் விதைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

சர்க்கரை நோய்
மாதுளம் பழம் சாப்பிடுவது சர்க்கரை நோய் வராமல் தடுக்க சிறந்த வழி மாதுளை சாப்பிடுவதுதான், ஆனால் நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இதனை சாப்பிடுவதை நிறுத்துவதுதான் நல்லது. ஏனெனில் குறிப்பிட்ட அளவை விட அதிகளவு சர்க்கரை உள்ளது.

எடை அதிகரிப்பு
நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் மாதுளையை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் அதிகளவு கலோரிகள் உள்ளது. கலோரிகள் அதிகமுள்ள இதனை எடுத்துக்கொள்ளும் போது இது எடை குறைப்பில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

அலர்ஜிக்கு என்ன செய்ய வேண்டும்?
மாதுளையால் சருமத்தில் அலர்ஜிகள் ஏற்பட்டால் அந்த இடத்தை தேய்க்கவோ அல்லது சொறியவோ வேண்டாம். அதேபோல அந்த இடத்தில் சோப்பு அல்லது தண்ணீர் போட்டு கழுவ வேண்டாம், ஏனெனில் இது அலர்ஜியை தீவிரப்படுத்தும். அதன்மீது களிம்புகளை பூசி அதன் ஈரப்பதத்தை எப்போதும் தக்கவைத்துக் கொள்ளவும். சருமத்திற்கு ஏற்றவாறு நெகிழ்வான ஆடைகளை அணியவும்.

Related posts

சௌ சௌ வை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்க அடிக்கடி இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க..சூப்பர் டிப்ஸ்…

nathan

மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த விதையை ஒரு கையளவு சாப்பிட்டா, உடல் எடை வேகமா குறைஞ்சிடும் தெரியுமா?

nathan

சூப்பர் சத்து… சிறுதானியப் பால்!

nathan

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கணுமா?பேரிச்சம்பழம் சாப்பிடுங்க போதும்.!

nathan

சுவையான காளான் மிளகு சாதம்

nathan

நீரிழிவு நோயாளிகள் குக்கர் சாதத்தினை சாப்பிட்டால் என்ன நடக்கும்? தெரிஞ்சிக்கங்க…

nathan

உடலை குளிர்ச்சியாக்கும் புளியந்தளிர்

nathan