உங்களுடைய பளிச்சென்ற பற்களை காட்டி ஒரு புன்னகை பூத்தாலே போதும் எல்லாரையும் எளிதாக கவர்ந்து விடலாம். அதுமட்டுமல்லாமல் இது மற்றவர்கள் முன்னிலையில் உங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
Does Turmeric Help In Teeth Whitening?
அதுவே உங்கள் பற்கள் மஞ்சளாக இருந்தால் மற்றவர் முன்னிலையில் சிரிப்பீர்களா? கண்டிப்பாக இல்லை அது உங்களுக்கு ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்தி விடும். இப்படி பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.
காரணங்கள்
அதிக அளவில் காபி பருகுதல்
வயதாகுதல்
பற்களை சரியாக பராமரிக்காமல் இருத்தல்
மருத்துவ சிகிச்சை
இப்பொழுது பற்களை வெண்மையாக்க நிறைய மருத்துவ சிகிச்சைகள் வந்திருந்தாலும் ஒவ்வொரு செக்அப்புக்கும் பல் மருத்துவரை அணுகுவது என்பது கஷ்டமாகவும் இருக்கும். மேலும் சிகச்சைக்கு பிறகு பற்களை ரெம்ப கவனமாக பராமரிக்க வேண்டியிருக்கும். இந்த மாதிரியான எந்த தொல்லையும் இல்லாமல் வீட்டு முறைகளைக் கொண்டே உங்கள் பற்களை பளிச் பளிச் என்று மாற்றலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
மஞ்சள்
பற்களை வெண்மையாக்க மஞ்சள் பெரிதும் பயன்படுகிறது. மஞ்சளில் உள்ள விட்டமின் சி, மக்னீசியம், செலினியம் போன்றவை வலிமையான பற்களை தருகிறது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இது பல் சொத்தை போக்க உதவுகிறது.
எப்படி பயன்படுத்த வேண்டும்
லெமன், மஞ்சள் மற்றும் உப்பு
லெமன் பற்களை ப்ளீச்சிங் செய்து வெண்மையாக்குகிறது. உப்பும் பற்களில் உள்ள கிருமிகளை போக்கி பற்களின் மஞ்சள் நிறத்தை சரி செய்கிறது.
பயன்படுத்தும் முறை
மஞ்சள் கிழங்கை லேசாக வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். ஒரு பெளலில் 1 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் சில துளிகள் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து அந்த பேஸ்ட்டை கொண்டு பற்களில் அப்ளே செய்யுங்கள். சில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 3 தடவை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள், தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்ந்த கலவை பற்களை வெண்மையாக்குகிறது.
பயன்படுத்தும் முறை
4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, 2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா, 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவற்றை ஒரு சுத்தமான பெளலிற்கு சேர்த்து கலந்து கொள்ளவும். முதலில் 2-3 நிமிடங்கள் பற்களை நன்றாக தேய்த்து கொள்ளுங்கள். பிறகு இந்த மஞ்சள் கலவையை கொண்டு வாயை கொப்பளியுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். ஒரு வாரத்திற்கு 1-2 முறை செய்து வந்தால் பற்கள் சீக்கிரம் வெண்மையாகும்.
மஞ்சள், கடுகு எண்ணெய் மற்றும் உப்பு
இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
பயன்படுத்தும் முறை
ஒரு சுத்தமான பெளலில் 1 டீ ஸ்பூன் கடுகு எண்ணெய், உப்பு, 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை டூத் பேஸ்ட் மாதிரி பயன்படுத்தி வாருங்கள். சில நிமிடங்கள் வரை தேய்க்கவும். இதை வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
மஞ்சள் மற்றும் வெண்ணிலா எஸன்ஸ்
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், சில துளிகள் வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து பல் தேயுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைக்கு பை பை சொல்லி விடலாம்.