28.3 C
Chennai
Tuesday, Jul 15, 2025
625.0.560.350.160.300.053
மருத்துவ குறிப்பு

அலட்சியப்படுத்தாதீங்க… உங்க கல்லீரலில் பாதிப்பு இருக்கு- காட்டிக்கொடுக்கும் அறிகுறிகள் இதோ…!

மனிதர்களின் உடலுறுப்புகளில் மிக முக்கிய உறுப்பாக கல்லீரல் திகழ்கிறது. உலகளவில் இன்று பல கோடி பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர்.

சில முக்கிய அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் உள்ளது என அறிந்து கொண்டு உடனே மருத்துவரை நாடினால் அதை குணப்படுத்த முடியும்.

மஞ்சள் காமாலை
கடுமையான மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு அதன் மூலம் கணையம் மற்றும் பித்தப்பை பாதிப்படைந்தால் கூட அது கல்லீரலையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

சிறுநீர் மற்றும் மலக்கழிவில் மாற்றம்
சிறுநீரானது தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் வந்தால் அது கூட கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறி தான்.

அதே போல, மலம் கழிக்கும் போது அதன் நிறம் பழுப்பிலிருந்து நல்ல மஞ்சளாகவோ, சாம்பலாகவே மாறினால் கல்லீரலில் சேதம் இருப்பதாக அர்த்தமாகும்.625.0.560.350.16

உடல் அரிப்பு
சிறுநீரக செயலிழப்பு மற்றும் கல்லீரல் பிரச்சனை என இரண்டுக்கும் முக்கிய அறிகுறியாக இருப்பது உடல் அரிப்பு.

அதாவது, தொடர்ந்து உடல் அரிப்பு அதிகம் இருந்தால் மருத்துவரை ஆலோசிப்பது நலம்

காயங்கள்
கல்லீரலில் பிரச்சனை இருப்பவர்களுக்கு உடலில் எளிதாக காயம் ஏற்படுவதோடு ரத்தமும் விரைவாக வெளிவரும். கல்லீரல் பாதிப்பால் இரத்தம் உறைய தேவையான புரத சத்து கிடைக்காது. அதனால் இந்த பாதிப்பு ஏற்படும்.

பசியின்மை மற்றும் உடல் சோர்வு
கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் பசியின்மை தொல்லை ஏற்படும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன் உடல் எடையும் குறையும்.

அதே போல உடல் எப்போது சோர்வாகவே இருப்பது மற்றும் குழப்பமான மனநிலையில் இருப்பதும் கூட இதன் அறிகுறி தான்.

வயிறு வீக்கம்
கல்லீரல் உடலில் வேலை செய்வதை நிறுத்தினால் குடிக்கும் தண்ணீர் வயிற்றிலே அதிகம் தங்கும், இதனால் வயிறு வீக்கமாக காணப்படும்

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே தகுந்த மருத்துவரைப் போய் பார்ப்பது நல்லது. உங்கள் கல்லீரல் பாதுகாப்பில் தான் உங்கள் மொத்த ஆரோக்கியமும் இருக்கிறது.”என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Related posts

பல், சொறி, சிரங்கு பிரச்சனைகளை குணமாக்கும் பிரமந்தண்டு

nathan

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க மேற்கொள்ள வேண்டிய டயட்…

nathan

சிறுநீரக கற்களை கரைக்கும் சிறுகண்பீளை

nathan

அல்சரா… அலட்சியம் வேண்டாம்!

nathan

இயற்கை வைத்தியத்தில் நோய்களுக்கான எளிய மருத்துவ குறிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன?

nathan

ஒற்றைத் தலைவலி ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் அதிகமா வருது என்று தெரியுமா?

nathan

கருவில் இருப்பது என்ன குழந்தைனு வீட்டிலேயே தெரிஞ்சிக்க

nathan

பெண்களே உங்களுக்கு ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க ஆசையா?

nathan