23.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
15593056
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… ஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ பலன்கள்!!

ஆடா தொடை இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் நான்கு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும்.

இது அளவில் குழந்தைகளுக்கு ஐந்து சொட்டும், சிறுவர்களுக்கு பன்னிரண்டு வயது வரை பத்துச் சொட்டும் பெரியவர்களுக்கு பதினைந்து சொட்டும் அளவாக கொடுத்தால் போதும்.

இதன் இலைச்சாறு 2 தேக்கரண்டி எடுத்து எருமைப்பால் 1 டம்ளரில் கலந்து 2 வேளை குடித்து வர, சீத பேதி, இரத்த பேதி குணமாகும். இதன் இலை 10 எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து 2 வேளை 48 நாட்கள் குடித்து வர, என்புருக்கி காசம் இரத்த காசம், சளிக் காய்ச்சல், சீதளவலி, விலாவலி நீங்கும்.

ஆடா தொடை வேருடன், கண்டங்கத்திரி வேர் சமஅளவு எடுத்து இடித்துப் பொடியாக்கி 1 கிராம் எடுத்து தேனில் கலந்து, 2 வேளையாக தொடர்ந்து சாப்பிட்டு வர, நரம்பு இழுப்பு, சுவாசகாசம், சன்னி, ஈளை, இருமல், சளிக் காய்ச்சல், என்புருக்கி, குடைச்சல் வலி குணமாகும்.

ஆடா தொடை இலையையும், காய்கள் இலைகளையும் வகைக்கு 1 கைப்பிடியளவு எடுத்து அரைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாகக் குடித்து வர, கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி குணமாகும்.

ஆடா தொடை உலர்ந்த இலையை பொடிசெய்து ஊமத்தை இலையில் சுருட்டு புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே நிற்கும். ஆடா தொடை இலை, துளசி, குப்பைமேனி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க விஷம் முறியும்.

ஆடா தொடை இலையுடன் சிவனார் வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, கட்டி போன்ற உள் இரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி, விஷம் குணமாகும்.

ஆடா தொடை இலையுடன் வேப்ப மர இலை, அரிவாள்மனைப் பூண்டு இலை, சிறியா நங்கை இலை சம அளவாக எடுத்து அரைத்து, புண்கள் மீது பற்றுப் போட, புண் ஆறி தழும்பும் மறையும்.

இதன் இலையுடன் குப்பை மேனியிலையும் சம அளவாக எடுத்துச் சேர்த்து அரைத்து, பாவாடையின் நாடாப் புண் உள்ளவர்கள் இடுப்பைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, புண் ஆறி கறுப்புத் தழும்பும் மறையும்.

Related posts

பணம் கூரைய பிச்சிகிட்டு கொட்டுமாம்… நீங்க பிறந்த தேதி என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைக்கு மசாஜ் செய்ய ஏற்ற சிறப்பான 10 எண்ணெய்கள்!!!

nathan

கற்றாழையை இப்படி சாப்பிட்டால் உயிருக்கு பேராபத்து?தெரிஞ்சிக்கங்க…

nathan

கருவுற்றிருக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்…! கர்ப்பிணி பெண்கள் மாம்பழம் சாப்பிட கூடாதா.?!

nathan

சளி பிரச்னையில் இருந்து மீள்வதற்கு ஈஸியான எட்டு டிப்ஸ்கள் இங்கே…

nathan

உங்கள் கணவரோ அல்லது மனைவியோ உங்களிடம் இப்படி நடந்து கொண்டால், அவர்கள் உங்களை ஒருபோதும் நேசிக்க மாட்டார்கள்!

nathan

கவணம்! பூப்பு அடைதலை முன்கூட்டியே தூண்டும் நகப்பூச்சு!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இதையெல்லாம் செய்யவே கூடாது.!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த சின்ன சின்ன விஷயங்கள் உங்கள் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா?

nathan