24.9 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pregnancy women health
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… கொரோனா காலத்தில் கர்ப்பவதி.. எப்படி ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது

ஆரோக்கியம்: கொரோனா காலத்தில் குறைவின்றி குழந்தைப் பெற்றெடுக்க கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது மிக முக்கியமானது. எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து பயனுள்ள எளிய வழிகளை பார்ப்போம்.
உங்களைச் சுற்றியுள்ள சூழல், நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போது, கர்ப்ப காலத்தில் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று நேர்மறையாக சிந்திப்பது, மற்றொன்று, உங்கள் மற்றும் உங்கள் குழந்தையின் நல்வாழ்வை உறுதிப்படுத்த உதவும் வழிகளைப் பின்பற்றுவது.
தற்போதைய சூழ்நிலையில் தனி மனித இடைவெளி மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது. “புதிய இயல்பு” ஆகிவிட்டதால், கர்ப்பிணிப் பெண்கள் அமைதியாக மனதை வைத்திருப்பது முக்கியம்.

ஆன்லைன் அமர்வுகளில் மருத்துவர்களுடன் தங்கள் பரிசோதனைகளைத் தொடர வேண்டும். தங்கள் கவலைகள் குறித்து வெளிப்படையாக கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“நம்மைச் சுற்றி நிச்சயமற்ற தன்மையு இருக்கையில், நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியங்களில் ஒன்று உங்கள் மற்றும் உங்கள் குழந்தையின் நல்வாழ்வை உறுதிப்படுத்த உதவும் நேர்மறையான மற்றும் இயல்பான நடைமுறை பழக்கங்களை பின்பற்றுவதாகும்” என்று ஹிமாலயா மருந்து நிறுவனத்தின் ஆர் அன்ட் டி ஆயுர்வேத நிபுணர் டாக்டர் பிரதிபா பாப்ஷெட் கூறினார்.
இது உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்து அமைதியான மனதை வைத்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். தொற்றுநோய்களின் போது கர்ப்பகாலம் நிச்சயமாக கடினமானதாக இருக்கும். நெரிசலான இடங்களைத் தவிர்ப்பதற்கும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கும் முடிந்தவரை வீட்டிலேயே இருப்பது நல்லது” என்று அவர் கூறினார்.
கர்ப்பகால பராமரிப்பு முன்பை விட இப்போது சற்று வித்தியாசமாகத் தோன்றலாம். அந்த மாற்றங்களை அணுக சில குறிப்புகள் இங்கே:
உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய இயல்பானதாக மாறும் வகையில் தினசரி நடவடிக்கைகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் உணவு, தியானம் மற்றும் யோகா முதல், தோல் பராமரிப்பு, போதுமான தூக்கம் மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் வரை, ஒரு நாளில் நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களின் பட்டியலையும் உருவாக்கி அதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
நீங்கள் வேலைக்கு அல்லது பரிசோதனைக்கு செல்லும் போது , சமூக இடைவெளியை பின்பற்றுவதை நினைவில் கொள்ளுங்கள் மற்றும் முகக்கவசம் அணிந்து ஒரு கிருமிநாசினியை கையில் எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில் இது கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களால் வெளிப்படும் அபாயத்தை குறைக்க உதவும்.
கர்ப்ப காலத்தில் அடிக்கடி பரிசோதிப்பது தாய் மற்றும் குழந்தைக்கு இன்றியமையாதது. எனவே, இந்த பரிசோதனைகளுக்கான ஆன்லைன் அமர்வுகளில் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். பிரசவ விவரங்கள் மற்றும் பிறப்புக்குப் பிந்தைய கவனிப்பு பற்றி புரிந்து கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் தோல் பராமரிப்பு உங்கள் தாய்மை கட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதால், பொதுவான கர்ப்ப காலத்தில் தோல் பிரச்சினைகளை சமாளிக்க உங்கள் அன்றாட வழக்கத்தில் மசாஜ் மற்றும் ஈரப்பதத்தை சேர்க்கவும்என்று பாப்ஷெட் கூறினார்.
மசாஜ் எண்ணெயைப் பயன்படுத்தி இனிமையான மசாஜ் செய்யுங்கள். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். வறண்ட சரும பிரச்சினைகளுக்கு உதவும். உடலுக்கு மசாஜ் செய்ய உடல் வெண்ணெயையும் நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் எந்த வழக்கத்தை பின்பற்றினாலும், ரசாயனங்கள் இல்லாத மூலிகை தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் சாப்பிடுவதிலிருந்து உங்கள் குழந்தை ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறது. அதிகப்படியான உணவைத் தவிர்க்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட சீரான உணவுகளை முன்னுரிமையாக்குங்கள். குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீரைக் குடிக்கவும்.
நீங்கள் சமையல் செய்வதில் ஆர்வமுள்ளவர் என்றால், ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு தகுந்த எளிய சமையல் குறிப்புகளைப் ஆன்லைனில் பாருங்கள்.
உங்கள் மன அழுத்தத்தை வெவ்வேறு வழிகளில் குறைத்து கொள்ளுங்கள். உங்களை அமைதிப்படுத்தி கொண்டு, புதிய பொழுது போக்குகளில் ஈடுபடவும் அல்லது பழையவற்றை மீண்டும் கண்டுபிடிக்கவும். சுவாச பயிற்சிகளைப் பயிற்சி செய்யுங்கள். ஏதாவது இசை கருவியை வாசிக்கலாம்.
புதிய மொழியைக் கற்றுக்கொள்லாம், ஆன்லைன் வகுப்புகளை படிக்கலாம் அல்லது நீங்கள் எப்போதும் செய்ய விரும்பிய எதைனயாவது செய்யலாம். ஒரு நர்சரியை அலங்கரிப்பது போன்ற உங்கள் குழந்தையின் வருகைக்கான திட்டங்களையும் நீங்கள் செய்யலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் போது உங்கள் குழந்தைக்கு வைரஸால் தொற்று ஏற்படுமா என்பதை குறித்து நீங்கள் கவலைப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் முலைக்காம்பு பகுதியை எப்போதும் சுத்தம் செய்யுங்கள். உங்கள் கைகளையும், உங்கள் குழந்தையைச் சுற்றியுள்ள இடத்தையும் அடிக்கடி சுத்தப்படுத்தவும்.
இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், வைரஸின் அறிகுறிகளைப் படித்து அறிந்து கொள்ளுங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும்.
தற்போதைய சூழ்நிலையைப் பற்றி எதிர்மறையான செய்திகளைப் படிப்பதைத் தவிர்க்கவும், இது பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதற்கு பதிலாக, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஏதாவது திரைப்படத்தை பார்த்தது நேரத்தைப் போக்கலாம் அல்லது நீங்கள் ரசிக்கும் எதிலாவது மனதை ஈடுபடுத்தலாம். இது உங்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

Related posts

இத படிங்க வெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்…!!

nathan

பெண்களே குதிகால் வெடிப்பை குறைக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ரத்தத்தை சுத்தமாக வைப்பது எப்படி?தெரிந்துகொள்வோமா?

nathan

வியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்

nathan

முதியோர்களுக்கான டயட் டிப்ஸ்

nathan

உங்களது பர்ஸில் மறந்தும் இந்த பொருளை வைக்காதீங்க!தெரிஞ்சிக்கங்க…

nathan

நம்முடைய வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி?

nathan

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எலும்பு பலவீனம்: ஏன்? எப்படி?

nathan