29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
கர்ப்பிணி பெண்களுக்கு

தாய்ப்பாலூட்டல் தொடர்பான சில மூட நம்பிக்கைகள்

[ad_1]

தாய்ப்பாலூட்டல் தொடர்பான சில மூட நம்பிக்கைகள்

மூட நம்பிக்கைகள் என்பன தொன்று தொட்டு நிலவிவரும் நம் கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ள ஒன்றாகும். வாழ்வில் நிகழும் அனைத்து சிறிய பெரிய நிகழ்ச்சிகளுக்கும் ஏகப்பட்ட நம்பிக்கைகள் நம் மத்தியில் நிலவி வருகின்றன.

தாய்ப்பாலூட்டலும் இதற்கு விதிவிலக்கல்ல. தாய்ப்பாலூட்டல் தொடர்பாகவும்  அன்று தொடக்கம் இன்று வரை முரண்பாடான கருத்துகள் நிலவி வருவதுடன் இது  தாய்மார்களை பெரும் குழப்பத்திற்கு இட்டுச் சென்று விடுகிறது. பிள்ளை பெற்று வீடு திரும்பும் தாயொருவருக்கு உற்றார் உறவினர்களிடமிருந்து ஏராளமான தகவல்கள் வந்து குவிகின்றன. தாய்ப்பாலூட்டல் தொடர்பான பொதுவான சில நம்பிக்கைகளை நோக்குவோம்.




தாய்ப்பாலூட்டல் குறிப்பிட்ட கால அட்டவணைக்கேற்ப வழங்கப்பட வேண்டும்

தாய்ப்பால் இரண்டு மணித்தியாலங்களுக்கொருமுறை அல்லது மூன்று மணித்தியாலங்களுக்கொருமுறை வழங்கப்பட வேண்டும் என நம்மில் பலர் ஆலோசனை வழங்கப்படுகின்றனர். இது ஒரு சராசரி அளவுகோள் தவிர தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டிய கால அட்டவணையல்ல. மாறாக தாய்ப்பாலானது பிள்ளைகளின் தேவைக்கேற்ப வழங்குவது சிறந்தது. உங்கள் குழந்தையால் தனக்கு தேவையான பாலைக் கட்டுப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

தாய்ப்பாலானது ஆறு மாதங்களின் பின் முக்கியமற்றது

குழந்தையின் முதல் ஆறு மாத காலத்திற்கு தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். என்பதை ஏற்றுக் கொண்ட பலரும் கூட ஆறு மாத காலத்தின் பின்பு தாய்ப்பாலை முக்கியமான ஒரு உணவாக கருதுவதில்லை. ஆறு மாத காலத்தின்  பின்பும் கூட தாய்ப்பாலானது அதே மூலக் கூறுகளுடன் அதே குண இயல்புகளுடன் காணப்படுகிறது. அதன் பயன்கள் சற்றும் குறைவதில்லை. ஆறு மாத காலத்தின் பின்பு தாய்ப்பால் மட்டும் வழங்குதல் போதுமானதல்ல எனினும் தாய்ப்பாலை தொடர்ந்து வழங்குதல் முக்கியமானது. குழந்தையின் முதல் ஒரு வருடத்திற்கு பிரதான உணவாக அமைய வேண்டி இருப்பதுடன் இரண்டாவது வயதில் பிரதான மேலதிக உணவாக அமைய வேண்டும்.

தாய்ப்பாலூட்டல்  வருத்தமானது

தாய்ப்பாலூட்டல்  என்பது ஒரு இனிதான அனுபவம். அது எந்த வகையிலும் வருத்தம் விளைவிக்கக் கூடியதல்ல. பாலூட்ட ஆரம்பிக்கும் முதல்  ஓரிரு  வாரங்களில் மார்பகங்களில் சிறிதளவு மாற்றங்களை உணரலாம்.

தாய்ப்பாலூட்டல் அசௌகரியமானது

நம்மில் சில தாய்மார்கள் பல்வேறு பிரச்சினைகளை காரணம் காட்டி தாய்ப்பாலூட்டல் அசௌகரியமானது என முடிவெடுக்கின்றனர். உண்மையில் தாய்ப்பாலூட்டல்  போத்தல் பால் வழங்குவதைவிட  சௌகரியமானது. ஏனெனில் நீரை கொதிக்க வைக்கின்ற தேவையில்லை.  பிள்ளை அழும் முன்பு பாலை தயாரிக்க வேண்டிய படபடப்பில்லை. கரைத்த பாலை பாலகன் வீரிட்டு அழுது கொண்டிருக்கும் போது சூடாற்றும் பதற்றமில்லை. சரியாக சுத்தம் செய்யவில்லை எனில் நோய் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அவதானமுமில்லை. அதுமட்டுமன்றி தினந்தோறும் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியில் பால்மா விலை ஏறுகிறதே என்ற கவலையுமில்லை. அந்த வகையில் தாய்ப்பாலானது முற்றிலும் இலவசமானது, உரிய விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. உரிய வெப்பநிலையில் உள்ளது. சுருங்கச் சொன்னால் குழந்தைகளுக்கான உடனடி பானம்.

தாய்ப்பாலூட்டும் குழந்தைக்கு மேலதிக நீர் தேவை

தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையானளவு நீர் அடங்கியுள்ளது. எனவே வேறான நீர் வழங்கி நோய் தொற்றுக்குள்ளாகும் அவதானத்தினை எடுக்கத் தேவையில்லை.


தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு அயன் குறைபாடு ஏற்படும்

இது சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமன்றி சுகாதார வேலையாளர்கள் மத்தியிலும் காணப்படுகின்ற பொதுவான ஒரு சந்தேகம். தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையானளவு இரும்புச் சத்து காணப்படுவதுடன் அது பாலகனின் உடலால் உறிஞ்சக்கூடிய விதத்திலும் காணப்படும். பால்மாவில் காணப்படும் அயன் இலகு நிலையில் அகத்துறிஞ்ச முடியாத நிலையில் இருப்பதுடன் சில பால்மா வகைகளில் தேவைக்கு அதிகமாகவும் காணப்படுகிறது.

ஒவ்வொரு தடவையும் இரண்டு மார்பகங்களாலும் பாலூட்ட வேண்டும்

இது தாய்ப்பாலூட்டும் பல பெண்களுக்கு உற்றார்  உறவினர்களால் வழங்கப்படும் ஒரு இலவச ஆலோசனை. ஒவ்வொரு தடவை தாய்பாலூட்டும் போதும் இரண்டு மார்பகங்களாலும்  வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை.  எனினும் ஒரு மார்பகத்தால் பாலருந்தி மார்பகம் வெறுமனான நிலையில் அடுத்த மார்பகத்தாலும் வழங்கலாம். அதை விடுத்து  குழந்தை ஒரு மார்பகத்திற்கு குழந்தையைக் கொண்டு செல்வது பொருத்தமானதல்ல. ஏனெனில் ஒரு மார்பகத்திலிருந்து வரும் பாலில் முதலில் வரும் ஞூணிணூஞு ட்டிடூடு இல் நீர் அதிகம். இரண்டாம் பகுதியில் அதிகம் புரதம்  காணப்படுவதுடன், கடைசியில் வரும் டடிணஞீ ட்டிடூடு இலேயே கொழுப்பு காணப்படுகிறது. எனவே குழந்தைக்கு ஒரு மார்பகத்தை முழுமையாக வெற்றிடமாக்க விடவில்லையெனில் குழந்தைக்கு  டடிணஞீ ட்டிடூடு கிடைக்காது.  அதிலுள்ள கொழுப்பும் கிடைக்காமல் போய்விடும். இதனால் குழந்தை அதிருப்தி அடைவதுடன் உரியளவு நிறை போடாமல் போகலாம்.

குழந்தைக்கு வயிற்றோட்டம், வாந்தி போன்ற நோய் ஏற்படின் தாய்ப்பாலூட்டலை  நிறுத்த வேண்டும்

குழந்தைக்கு எந்தவகை நோய் ஏற்பட்டாலும் தாய்ப்பாலூட்டலை  நிறுத்தத் தேவையில்லை. உண்மையில் தாய்ப்பாலானது குழந்தையின் குடல் தொற்றுகளுக்கு  மருந்தாக செயற்பட வல்லது. எந்த நோய் வரினும் தொடர்ந்து தாய்ப்பால் வழங்குதல் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தாய்ப்பால் வழங்கும் முன்பு தாய் பாலருந்த வேண்டும்

தாய்ப்பாலை வழங்கும் தாயொருவர் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் கலந்த நிறையுணவு சாப்பிடுதல் போதுமானது. பாலுற்பத்தியாவதற்கு தாய் பாலருந்த வேண்டும் என்பது ஒரு பிழையான கருத்து. தன் குழந்தைக்கு  பாலூட்டும் எந்த ஒரு முலையூட்டியும் பாலருந்துவதில்லை. பாலுற்பத்திக்கும், பாலருந்தலிற்கும் எதுவித தெடர்புமில்லை.

தாய்ப்பாலை வழங்கும் தாய் தொடர்ந்து பருமனடைவார்

இது நம் பெண்கள் பலரையும் ஆட்டிப் படைக்கும் ஒரு வீண் சந்தேகம். தாய்ப்பால் வழங்குவதால்  அதிகம் சாப்பிட வேண்டும். அதனால் கர்ப்ப காலத்தில்  ஏறிய நிறை குறையாது. தொடர்ந்தும் நிறை கூடிவிடும் என பல பெண்கள் அஞ்சுகின்றனர். அது முற்றிலும் தவறு. உண்மையில் தாய்ப்பால் வழங்கலானது கர்ப்ப காலத்தில் கூடிய நிறை குறைவதைத் துரிதப்படுத்துகின்றது. ஏனெனில், தாய்ப்பால் வழங்கும் ஒரு பெண்ணின் உடலில் ஒரு  நாளைக்கு ஏறத்தாழ 300 தொடக்கம் 500 கலோரிகள் செலவழிக்கப்படுகின்றன. பட்டினி கிடந்து முற்றும் இன்னோரன்ன விதத்தில் உடல் எடையைக் குறைக்க எத்தனிப்பதை விட சுகாதார முறையில் உடல் எடையை குறைக்கும்.

பாலூட்டும் தாய் கருத்தரிப்பின் உடனடியாக தாய்ப்பாலூட்டலை நிறுத்த வேண்டும்

இது பரம்பரை பரம்பரையாக சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு பிழையான தகவலாகும். பாலூட்டும் தாயொருவர் கருத்தரிப்பின் தாய்ப்பாலூட்டலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. இது தாய்ப்பாலூட்டும் குழந்தைக்கோ கருவிலிருக்கும் குழந்தைக்கோ எந்த வித தீங்கினையும் ஏற்படுத்துவதில்லை.

பொது இடங்களில் தாய்ப்பாலூட்ட முடியாது

இது நம்மில் பல பெண்களுக்கு பெரும் தடையாகவும் தாய்ப்பாலூட்டலை நிறுத்துவதற்கு ஒரு காரணமாகவும் அமைந்து விடுகிறது. பொது இடங்களில்  தாய்ப்பாலூட்டுவதற்கு கட்டாயம் பெண்களின் மார்பகங்களை வெளிக்காட்ட தேவை வராது. பொது இடங்களில் ஒழுக்கமான முறையில் உரிய விதத்தில் குழந்தையைப் பிடித்து பாலூட்ட தாய்மார்கள் பழக வேண்டும்.  அது மட்டுமன்றி இன்று பல பொது இடங்களில் தாய்ப்பாலூட்டலுக்கென  இடங்கள் வேறாக்கப்படுவதுடன் பெரும்பாலான பொது இடங்களில் மறைவான இடங்கள் இல்லாமல் இல்லை.

பொது இடங்களில் தாய்ப்பாலூட்டலில் ஏற்படும் சிரமத்தினை முன்கூட்டியே யோசித்து அதற்கேற்ற வகையில் பயண ஆயத்தங்களையும் உடைகளையும் சரி செய்து கொள்வதுடன் இதனை ஒரு பெரும் தடையாக எண்ணாதிருக்க முயற்சி செய்வோம்.

வாழ்க்கையில் புதியவொரு முயற்சியில் இறங்கும் போது மனதில் எழும் சந்தேகங்கள் பல. இவற்றுக்கு விடை தேடிச் செல்லும்  போது துரதிர்ஷ்டவசமாக  பிழையான விடைகளும் கிடைக்காமலில்லை. தாய்ப்பாலூட்டல் எனும் அரும் முயற்சியில் உங்களுக்கு  எழும் சந்தேகங்களை உரியவர்களிடம் விளக்கமறிந்து வெற்றி காணுங்கள்.

Related posts

கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.

nathan

கர்ப்ப கால டிராபோபோலிக் நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்.

nathan

கர்ப்ப காலத்தில் பொதுவான கேள்விகளுக்கு பதில்

nathan

சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவுக்கு குங்குமப் பூ!….

sangika

கருவில் இருப்பது ஆணா பெண்ணா?

nathan

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

nathan

கர்ப்பிணிகளுக்காக…

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கான கை வைத்தியம்

nathan

பிரசவத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

nathan