31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் பிரச்சினையா?

அம்மை நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலமாகத்தான் பரவுகின்றன. அதனால்தான் அம்மை நோயை “பிராப்லெட் இன்ஃபெக்ஷன்” என்று சொல்கிறோம். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து “வைரஸ் கிருமிகள்” காற்றில் வெளியேற்றப்பட்டு, மற்றவர்களைத் தாக்குகிறது.

இது தவிர நோயாளியைத் தொடும்போது கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அம்மை நோய்களை தீவிரமான ஒரு “தொற்று நோய்” என்று சொல்கிறோம். கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு அம்மை நோய் வந்தால், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் அம்மை நோய் வந்தால் உடனடியாக பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

சாமி குற்றம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. ஏனென்றால், குழந்தையின் இதயம் ஐந்தாவது வாரம் வளர ஆரம்பித்து விடுகிறது. அந்த சமயத்தில் அம்மை நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமல்ல, ஆண் குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சரியான கிச்சை கொடுக்கப்படாவிட்டால், விதைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு மலட்டுத் தன்மையும்கூட ஏற்படலாம்.

Related posts

கர்ப்பம் குறித்து யாரும் சொல்லாத சில உண்மை விஷயங்கள்!!!

nathan

கர்ப்பிணிகள் ஒருசில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்

nathan

ஆபத்தை தரும் கருக்குழாய் கர்ப்பம்

nathan

தாய்ப்பாலா, புட்டிப்பாலா… குழந்தை எப்போது கண்டுபிடிக்கும் தெரியுமா?

nathan

கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது ரொம்ப நல்லது!

nathan

பிரசவத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

nathan

கர்ப்ப காலத்தில் களைப்பு ஏற்படுவதன் காரணம் இதுதானாம்…!

nathan

உங்களுக்கு குழந்தை அறிவா பிறக்கனும்னா கர்ப்பமா இருக்கும் போது இதை முயன்று பாருங்கள்!

nathan

குழந்தையின் வளர்ச்சி!

nathan