இந்த காலகட்டத்தில் உங்கள் உடலில் படிந்துள்ள கழிவுகளை அகற்றுவது அவசியம்.
உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் அதிகரிக்கும் எண்ணற்ற நன்மைகள் கொண்ட உடல் நச்சகற்றும் வழிகள் உள்ளன.
உடலில் இருந்து கழிவுகள் மற்றும் நச்சுகளை நீக்க பாதங்களில் நச்சகற்றும் சிகிச்சை ஒரு சிறப்பான தீர்வாகும்.
பாதங்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதால் உங்கள் ஒட்டுமொத்த உடலும் தளர்ந்து எல்லா உறுப்புகளும் சுத்தம் செய்யப்படுகின்றன.
பாதங்களில் உள்ள கழிவுகளை அகற்றுவது எப்படி?
வீட்டில் இருந்து கொண்டே பாதங்களில் உள்ள கழிவுகளை அகற்ற சில எளிமையான வழிகள் உள்ளன.
இந்த வழிகளானது வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியானதாக இருக்கும். அவற்றை இப்போது காணலாம்.
உங்கள் சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு பொருள் ஆப்பிள் சீடர் வினிகர்.
உங்கள் பாதங்களில் உள்ள கழிவுகளை அகற்ற இந்த வினிகர் உதவுகிறது.
ஒரு டப் வெந்நீரில் ஒரு கப் வினிகர் சேர்க்கவும்.
பிறகு அந்த நீரில் 2 ஸ்பூன் கல் உப்பு, 3-4 துளிகள் அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இந்த நீரில் உங்கள் பாதங்களை 20-30 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு கால்களை நீரில் இருந்து எடுத்து சுத்தமான டவல் கொண்டு துடைத்து ஏதாவது க்ரீம் அல்லது மாய்ஸ்சுரைசர் தடவவும்.
இது எப்படி வேலை செய்கிறது?
நீருக்குள் உங்கள் பாதங்களை ஊறவிடுவதால் நரம்புகள் மென்மையாகிறது. பாத வலியை குணப்படுத்த வெந்நீர் ஒரு சிறந்த தீர்வாகும்.
மேலும் கூடுதலாக இதில் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்ப்பதால் பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உயர்கிறது.
இதன் காரணமாக உடலின் தசைகள் தளர்வுற்று இரவில் நல்ல உறக்கம் கிடைக்கிறது. அதே நேரம், கல் உப்பு பயன்படுத்துவதால் வலி குறைகிறது.