வயிற்றில் உள்ள புழுக்கள் பெரும்பாலும் இரைப்பைக் குழாய், குடல் சுவர் போன்ற இடங்களில் தான் உள்ளன. ஒருவரது வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், அது மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் வயிற்றில் புழுக்களாவன சரியாக வேக வைக்காத இறைச்சி, பலவீனமான நோயெதிப்பு மண்டலம், அசுத்தமான நீரைக் குடிப்பது மற்றும் போதிய சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் ஏற்படலாம்.
நம் குடலில் உள்ள பொதுவான புழு வகைகளாவன உருளைப்புழுக்கள், ஊசிப் புழுக்கள், நாடாப்புழுக்கள் போன்றவை. நம் உடலில் நுழையும் இந்த புழுக்கள் குடலை இருப்பிடமாக கொண்டு, நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சி உயிர் வாழ்ந்து, நமக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை உண்டாக்கும். எனவே அவ்வப்போது நம் உடலை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இப்போது குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் சில கிராமத்து வைத்தியங்களைக் காண்போம்.
குடலில் புழுக்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்:
* பசியின்மை
* வயிற்று வலி
* வயிற்றுப்போக்கு, குமட்டல் அல்லது வாந்தி
* வாய்வுத் தொல்லை/வயிற்று உப்புசம்
* அடிவயிற்று வலி
* தொடர்ச்சியான இருமல்
* பலவீனம்
* களைப்பு
* எடை இழப்பு
பழுக்காத பப்பாளி
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 1 டேபிள் ஸ்பூன் பழுக்காத பப்பாளி கூழ் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பருக வேண்டும். இப்படி தினமும் என ஒரு வாரம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
மஞ்சள்
மஞ்சளில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் இயற்கையாக உள்ளது. மற்றும் இது அனைத்து வகையான குடல் புழுக்களையும் நீக்க உதவும். அதற்கு ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருந்து புழுக்கள் வெளியேறிவிடும்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் உள்ள குகூர்பிடாசின் என்னும் உட்பொருள் ஒரு ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. இது உடலில் உள்ள புழுக்களை செயலிழக்கச் செய்து, உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. 1 டேபிள் ஸ்பூன் வறுத்த பூசணி விதைகளை 1/2 கப் நீர் மற்றும் தேங்காய் பாலில் சேர்த்து கலந்து, ஒரு வாரத்திற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
வேப்பிலை
வேப்பிலையை நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1/2 டீஸ்பூன் வேப்பிலை பேஸ்ட்டை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் குடித்து வந்தால், உடலில் இருந்து புழுக்கள் அனைத்து வெளியேறிவிடும்.
பூண்டு
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்றில் இருந்து புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதற்கு ஒரு வாரத்திற்கு பச்சை பூண்டு அல்லது பூண்டு டீயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
தேங்காய்
தேங்காய் வயிற்றுப் புழுக்களை வெளியேற்ற உதவும் சக்தி வாய்ந்த பொருள். ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை காலை உணவின் போது உட்கொள்ள வேண்டும். 3 மணிநேரம் கழித்து, 1 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரத்திற்கு செய்து வந்தால், உடலில் உள்ள அனைத்து வகையான புழுக்களும் வெளியேறிவிடும்.
கிராம்பு
கிராம்பில் உள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள், உடலில் உள்ள புழுக்கள் மற்றும் அதன் முட்டைகளை அழிக்கும். அதற்கு ஒரு கப் நீரில் 2 அல்லது 3 கிராம்பைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 3-4 முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடிக்க வேண்டும்.
கேரட்
கேரட்டில் பீட்டா-கரோட்டீன் வளமான அளவில் உள்ளது. இது குடல் புழுக்களின் முட்டைகளை அழிக்கக்கூடியது. எனவே உங்கள் உடலில் புழுக்கள் சேராமல் இருக்க நினைத்தால், தினமும் ஒரு கேரட்டை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
ஓமம்
ஓமம் குடல் புழுக்களை அழிப்பதில் சிறந்த பொருள். ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 15-20 நிமிடங்கள் கழித்து, 1/2 டீஸ்பூன் ஓமத்தை வாயில் போட்டு, 1 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், குடலில் உள்ள புழுக்கள் முழுமையாக வெளியேறிவிடும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், குடலில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறி, உடல் சுத்தமாக இருக்கும்.