26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
4 bitter gourd 155616925
oth

தெரிஞ்சிக்கங்க… ஆரோக்கியம் என நீங்கள் நினைத்து சாப்பிடும் இவை விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் தெரியுமா?

இன்றைய காலத்தில் ஆண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாக விந்தணு குறைபாடு உள்ளது. பொதுவாக ஒரு ஆண் உச்சக்கட்ட இன்பத்தை அடைந்து வெளியேற்றும் விந்துதள்ளலின் போது, சுமார் 250 மில்லியன் விந்தணுக்களை வெளியிடுகிறார். இருப்பினும், எப்போது ஒரு ஆண் குறைந்த விந்தணு பிரச்சனையான ஒலிகோஸ்பெர்மியாவால் பாதிக்கப்படுகையில் வெளியேற்றும் விந்துவானது இயல்பை விட குறைவாக இருக்கும். அதாவது 15 மில்லியனுக்கும் குறைவாக இருக்கும். இதனால் பெண்ணின் கருமுட்டையுடன் சேர்ந்து கருத்தரிக்க உதவும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ஆணின் கருவளம் குறைந்து போகும்.

பொதுவாக புகைப்பிடித்தல், உடல் பருமன், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மதுப்பழக்கம், மனநோய் எதிர்ப்பு மருந்துகள் போன்றவை ஆண்களில் கருவுறுதல் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாகின்றன. மேலும் ஒருசில மூலிகைகளும் ஆண்களை பெற்றோராக்கும் மகிழ்ச்சியில் இருந்து விலக்கி வைக்கின்றன.

ஆனால் ஆராச்சியாளர்களின் கூற்றுப்படி, பூண்டு, வேம்பு, பப்பாளி விதைகள், புதினா, , வில்வ இலை மற்றும் கிராம்பு போன்றவற்றை குறைவான அளவில் உட்கொள்வதால், அது ஆண்களின் கருவளத்தை அதிகம் பாதிக்காது. இருப்பினும் அதிகமான அளவில் உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும்.

இப்போது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, கருவளத்தைப் பாதிக்கும் மூலிகைப் பொருட்கள் எவையென்று காண்போம்.

பூண்டு

பூண்டில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. இயற்கை மருத்துவத்தில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பூண்டு பயன்படுத்தப்படுகிறது. ஆய்வுகளின் படி, பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டால், அது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைக் குறைக்கும் மற்றும் புதிய விந்தணுக்களின் உற்பத்தியைக் குறைக்கும்.

வேம்பு

வேம்பில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. இருப்பினும் ஆண்கள் வேப்பிலையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது ஆண்களின் கருவளத்தைப் பாதித்து, கருவுறுதலுக்கு இடையூறை ஏற்படுத்தும்.

பப்பாளி விதைகள்

பொதுவாக பப்பாளி பழம் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடியவை. எனவே கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது. அதே சமயம் அந்த பப்பாளியின் விதைகள் ஆண்களுக்கான ஒரு இயற்கை கருத்தடை. ஆண்கள் இந்த விதையை உட்கொண்டால், அது மலட்டுத்தன்மையைத் தூண்டிவிடுவது போல் செயல்படும்.

பாகற்காய்

கசப்புச் சுவையுடைய பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்ல காய்கறி. இதை சர்க்கரை நோயாளிகள் அதிகம் உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஆனால் பாகற்காயை ஆண்கள் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் அது ஆண்கள் மத்தியில் மலட்டுத்தன்மையைத் தூண்டும் திறனைக் கொண்டுள்ளது.

புதினா

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், புதினா பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான லுடீனைசிங் ஹார்மோன் (எல்.எச்) மற்றும் ஃபோலிகல் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (எஃப்.எஸ்.எச்) போன்றவற்றை ஊக்குவிக்கும். இருப்பினும், ஆண்கள் இந்த புதினாவை அளவுக்கு அதிகமான அளவில் உட்கொண்டால், அது ஆண் இனப்பெருக்க ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனைக் குறைக்கும். ஆகவே ஆண்கள் அளவுக்கு அதிகமாக புதினாவை உணவில் சேர்க்கக்கூடாது.

வில்வ இலை

ஆராச்சியாளர்களின் கூற்றுப்படி, வில்வ இலை டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதிக்கிறது மற்றும் ஆண் எலிகளில் விந்தணுக்களின் அடர்த்தி மற்றம் இயக்கத்தைக் குறைக்கிறது. ஆகவே இந்நிலை ஏற்படாமல் இருக்க ஆண்கள் வில்வ இலையை தவிர்ப்பது நல்லது என கருதப்படுகிறது.

கிராம்பு

மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்பில் எண்ணற்ற நன்மை அளிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இத்தகைய கிராம்பு சமையலில் கிராம்பு நல்ல மணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆண்கள் கிராம்பை தங்கள் உணவில் அளவுக்கு அதிகமாக சேர்த்தால், அது விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும்.

Related posts

பாலுறவுத் திறத்தினை மேம்படுத்தும் வயாகரா: வெங்காயம்

nathan

இத படிங்க! விந்தணு பற்றாக்குறையை பற்றி அந்த பின், அதை எப்படி அதிகரிப்பது

nathan

இவை ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகிறது.

sangika

பாடலுக்கு செம்ம Cute ஆக ஆடிய தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி..!

nathan

தகவல்.. நீண்ட இடைவெளிவிட்டு உடலுறவு கொள்ளும் ஆண்களின் விந்தணுக்க‍ள் பாதிப்படையும்!

nathan

நடிகை சாயிஷாவின் அம்மாவின் பின்னால் திரிந்த பிரபல நடிகர்

nathan

முருங்கை விதை விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யுமா?

nathan

பெண்களுக்கான வயாகரா “அந்த” விஷயத்திற்கு விமோசனம் தருமா???

nathan

கர்ப்பகால உடலுறவு பற்றிய தெளிவு

nathan