30.8 C
Chennai
Monday, May 20, 2024
அழகு குறிப்புகள்

சிம்பிளான அலங்காரம் உங்கள் மதிப்பை கூட்டும்

 

சிம்பிளான அலங்காரம் உங்கள் மதிப்பை கூட்டும் நீங்கள் அணிந்திருக்கும் உடைக்கு ஏற்றபடி சிம்பிளாக ஆக்ஸசரீஸ் அணிய வேண்டும். சின்ன பிரேஸ்லெட் மற்றும் மெல்லிய மோதிரம் உங்கள் கம்பீரத்தைக் கூட்டிக் காட்டலாம். பகட்டாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கைகளில் டஜன் கணக்கில் வளையல்களை அடுக்குவதும், காது அறுந்துவிடும் அளவுக்கு மெகா சைஸ் கம்மலை அணிவதும் கூடாது.

அதிக சத்தம் வராத கொலுசு அணியலாம். கொலுசு மற்றும் வளையல்களில் இருந்து எழும் சத்தம் பிறரை டிஸ்டர்ப் செய்யாத வகையில் இருக்க வேண்டும். கழுத்தையொட்டி மெல்லிய செயினும் விரும்பினால் அதில் சிறிய டாலரும் கோர்த்து அணியலாம். நகைகள் அணிந்து செல்ல வேண்டியது முக்கியம் என்றால் முத்துக்கள் பதித்த மாலையை அணியலாம்.

இது எந்தவித ஆடைக்கும் பொருந்திப் போவதுடன் உங்கள் தோற்றத்தையும் ரிச்சாக காட்டும். ஸ்டிராப் வைத்த ஷூக்களைத் தவிர்த்து கால் முழுக்க கவர் செய்கிற ஷூக்களை அணியலாம். பாயிண்ட் ஹீல் வகையறாக்கள் முதுகுவலியை ஏற்படுத்தும் என்பதால் மைல்டான ஹீல் வைத்த செருப்புகளை அணிவது நல்லது.

மெகா சைஸ் ஹேண்ட் பேகை விட உங்கள் பொருட்களை வைக்கப் போதுமான அளவில் இருக்கும் சின்ன ஹேண்ட் பேக் நல்லது. அதேபோல மணிகள் கோர்க்கப்பட்ட ஃபேன்ஸி ஹேண்ட் பேக்குகளைத் தவிர்க்க வேண்டும். சோர்வான அப்ரோச் தரும் டல் கலர் ஆக்ஸசரீஸைத் தவிர்ப்பது நல்லது.

அதற்காக கண்ணை குருடாக்கும் பளீர் நிறங்களுக்கும் ஆதரவு தரக்கூடாது. உங்களை பெப்பியாக காட்டும் பிங்க் மற்றும் மஞ்சள் நிறங்களையும் தவிர்க்க வேண்டும். கறுப்பு, வெள்ளை, கிரே, நேவி போன்ற நிறங்கள் நல்லது. நீங்கள் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ற அல்லது பொருந்திப் போகிற நிறத்தில் உங்கள் ஷூ அல்லது ஹேண்ட் பேக் இருந்தால் அந்த மிக்ஸ் அண்ட் மேட்ச் காம்பினேஷன் நிச்சயம் பர்ஃபெக்ட் லுக்ட் தரும்.

சிம்பிளான சிகையலங்காரம் உங்கள் மதிப்பைக் கூட்டும். நீளமான கூந்தல் இருந்தால் சாதாரண பின்னலே போதுமானது. இல்லையெனில் வெறுமனே ரப்பர் பேண்ட் மட்டும் அணியலாம். இன்ச் கணக்கில் மேக் அப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஹேர் ஸ்பிரே மற்றும் பெர்ஃபியூம் வகையறாக்களையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

மெல்லிய நறுமணம் தரும் பெர்ஃபியூம் போடுவதும் தனி ஸ்டைல்! ஆடையும் அலங்காரமும் எப்படி உங்கள் இமேஜை முன்னிருத்துகிறதோ அதேபோல உங்கள் சுத்தமும் உங்களின் மதிப்பீட்டை மாற்றும். சுத்தமான நக பராமரிப்பு, அலைபாயாத கூந்தல், மூக்கை உறுத்தாத பாடி ஸ்பிரே போன்றவையும் உங்கள் மீதான பிறர் பார்வையை மாற்றும்.

உங்கள் வயதும் அதற்கேற்ப நீங்கள் அணிகிற உடையும் ஒன்றுக்கொன்று பொருந்திப் போக வேண்டும். உங்களது தோற்றம்தான் உங்கள் கேரக்டரை முன்னிறுத்தும். சூழலுக்குத் தகுந்தபடி ஆடை அணிந்து சென்றால் உங்களை கண்ணியமாக பார்ப்பதுடன் உங்கள் டிரெஸ்ஸிங் சென்ஸ் குறித்துப் புகழவும் செய்வார்கள்.

Related posts

தங்கம் போல் ஜொலிக்க தக்காளி!…

nathan

படப்பிடிப்பில் வழுக்கி விழுந்த ரக்சிதா! காணொளி

nathan

மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் திரும்பினார் -கால்விரல்கள் அகற்றப்பட்டவரின் தற்போதைய நிலை

nathan

கும்ப ராசிக்கு இடம்மாறும் சனி!தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர்கள்

nathan

ஃபேஸ் மாஸ்க்

nathan

சூப்பர் டிப்ஸ் உதடுகளை கருமையின்றி வைத்துக் கொள்வது எப்படி?

nathan

உங்கள் கால்களையும் கைகளையும் ஒளிரச் செய்ய உதவும் உதவிக்குறிப்புகளை நாங்கள் இக்கட்டுரையின் மூலம் உங்களுக்குக் கொண்டு வருகிறோம்.

nathan

முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழத் தோலை பயன்படுத்தினால்……?

nathan

மீண்டும் சூடுபடுத்தி மட்டும் சாப்பிடாதீங்க! விஷமாகும் 5 உணவுகள்

nathan