கருவில் வளர்வது என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் பொதுவாக அனைவருக்குள்ளும் அதிகமாகி இருக்கும். ஆனால் சட்டப்படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வது என்பது குற்றச் செயலாகும். ஏனெனில் குழந்தையின் அருமை தெரியாத மூடர்கள் குழந்தையின் பாலினம் தெரிந்தவுடன் வேண்டாத குழந்தையாக இருந்தால் கருவிலேயே அழித்து விடுகிறார்கள். குழந்தை என்பது வரம், அவர்கள் எந்த பாலினத்தில் இருந்தாலும் அவர்களை பாதுகாத்து வளர்க்க வேண்டியது உங்கள் கடமை என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இந்த பதிவை தொடருங்கள்.
நமது நாட்டில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய பல வேடிக்கையான வழிகள் பின்பற்றப்படுகின்றன. பெண்கள் விரும்பி சாப்பிடும் உணவுத் தொடங்கி, அவர்கள் வயிற்றின் அளவு, வடிவம், அவர்கள் தூங்கும் முறை என பலவற்றைக் கொண்டு அவர்கள் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கூறுவார்கள். ஆனால் அது எதுவும் துல்லியமாக இருக்காது. இந்த பதிவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை துல்லியமாகக் கணிக்கும் சீன முறையை பற்றி பார்க்கலாம்.
சீன காலண்டர்
சீனாவில் 700 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட, சீன பாலின முன்கணிப்பு காலண்டர் பெண்களின் வயது மற்றும் கருத்தரித்த மாதத்தைப் பயன்படுத்திஅவர்களுக்கு பிறக்கப் போவது பையனா அல்லது பெண்ணா என்று கணிக்கிறது. இந்த காலண்டரை எப்படி பயன்படுத்தலாம் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
சீன பாலின காலண்டரின் தோற்றம்
பண்டைய சீனா குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் முறையை கண்டுபிடித்தது, ஏனெனில் சீனர்கள் அந்த காலத்தில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே அதிகம் எதிர்பார்த்தனர். ஏனெனில் அவர்களுக்கு அதிக படைவீரர்களும், விவசாயிகளும் தேவைப்பட்டனர். ஆண் குழந்தைகள் வேலைக்கு செல்வதன் மூலம் குடும்பத்திற்கு பணத்தை சம்பாதித்துத் தருவார்கள், பெண்கள் திருமணம் ஆகும்வரை வீட்டிலேயே இருப்பார்கள் என்று அவர்கள் கருதினர்.
அறியப்படாத அறிவியலை அடிப்படையாகக் கொண்டது
சீனா பல போர்களில் ஈடுப்பட்டது, எனவே அவர்களுக்கு அதிக படைவீரர்கள் தேவைப்பட்டனர். நிலாவை அடிப்படையாகக் கொண்ட சீன கர்ப்ப காலண்டர் மற்றும் கால்குலேட்டரை கண்டுபிடித்ததன் மூலம் பிறக்காத குழந்தையின் பாலினத்தை கண்டறியும் முறையை சீனா கொண்டுவந்தது. இது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இதன் முடிவுகள் அனைவரும் ஏற்றுக்கொள்வதாக இருக்கிறது.
பாலின காலண்டரின் மர்மம்
பண்டைய குழந்தையின் சீன பாலின முன்கணிப்பு விளக்கப்படம் ஒரு சீன விஞ்ஞானியால் அரச கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது சீன அட்டவணை குவிஸ் கணிப்புகள் கர்ப்ப காலத்தில் குழந்தையின் பாலினத்தை கணிக்க பயன்படுத்தப்படுகின்றன.
நிலாவை அடிப்படையாகக் கொண்டது
சீன பாலின காலண்டர் சந்திர நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது, இது நிலவின் கட்டங்களுக்கு ஏற்ப தேதிகளைக் காட்டுகிறது. சீன சந்திர நாட்காட்டி குழந்தை முன்கணிப்பு கருத்தரிக்கும் நேரம் மற்றும் கருத்தரிக்கும் மாதத்தில் தாயின் சீன வயதைப் பயன்படுத்தி கணிக்கிறது.
சீனர்களின் நம்பிக்கை
சீன குழந்தை பாலின முன்கணிப்பு ஒரே வயதுடைய பெண்கள் ஒரே பாலினத்தின் குழந்தைகளை கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. சீன பாலின முன்கணிப்பு கால்குலேட்டர் உங்கள் சீன சந்திர வயதைப் பயன்படுத்தி உங்கள் குழந்தை பாலினத்தை கணிக்கும். உதாரணமாக, சீன குழந்தை பாலின கால்குலேட்டரின் கூற்றுப்படி, ஜனவரி மாதத்தில் கருத்தரிக்கும் 21 வயது பெண்கள் ஒரு பையனை கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது.
எப்படி கணிப்பது?
சீன கர்ப்ப காலெண்டரைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. முதலில், கருத்தரிப்பின் போது தாயின் சீன வயதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். கிரிகோரியன் காலெண்டரின் அடிப்படையில் சீன வயது உங்கள் உண்மையான வயதிலிருந்து கணிசமாக வேறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை பெண் ஏற்கனவே கருத்திருந்தால், கருத்தரித்த மாதத்தை மேல் கிடைமட்ட வரிசையில் இருந்து குறித்துக் கொள்ள வேண்டும். இப்போது தாயின் வயது மற்றும் கருத்தரிக்கும் மாதத்துடன் பொருந்தும் விளக்கப்படத்தில் இருக்கும் பெட்டி குழந்தையின் பாலினத்தைக் குறிக்கும்.
எங்கே கிடைக்கும்?
சீன பாலின காலண்டரின் பல்வேறு வகைகள் ஆன்லைனில் எளிதாகக் கிடைக்கும். சில வெப்சைட்டுகள் சீன பாலின கால்குலேட்டரின் மூலம் உங்களின் வயதை சந்திர சீன வயதாக மாற்றும். இந்த கால்குலேட்டரை பயன்படுத்தும்போது உங்கள் சீன சந்திர வயதைப் பயன்படுத்தாவிட்டால் குழந்தையின் பாலினக் கணிப்பு துல்லியமாக இருக்காது. சரியான கணிப்புக்கு கருத்தரித்த மாதம் துல்லியமாக தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.