23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
625.500.560.350.160
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை வெறும் வயிற்றில் ஆண்கள் சாப்பிடலாமா?

பேரிச்சம் பழத்தை அன்றாடம் உட்கொண்டு வந்தால் ஆண்களை அதிகம் தாக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மற்றம் இதர பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரிச்சம்பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்த சிறிய பேரிச்சம் பழத்தில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முக்கியமாக பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமாக உள்ளது.

அத்தகைய பேரிச்சம் பழத்தை மருத்துவ குணம் நிறைந்த தேனுடன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா? முழுமையாக இது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும்.
தேனில் ஊற வைத்த பேரிச்சையில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இதனால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து இரத்த சோகையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
குடலியக்க பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, குடலியக்கம் சீராக்கப்படும்.
முக்கியமாக இதனால் குடல் புற்றுநோய் வரும் அபாயம் தடுக்கப்படும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்போர், பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு, உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழம், இதய செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இதில் உள்ள பீட்டா-டி-க்ளூக்கான், உடலின் கொலஸ்ட்ரால் உறிஞ்சும் அளவு குறைந்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையால் இதய நோய் வருவது தடுக்கப்படும்.

Related posts

குழந்தையின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்க இத செய்யுங்கள்!…

sangika

40 வயசு ஆயிடுச்சா? அப்படின்னா இந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்!

nathan

வயது வந்த பெண்களுக்கு ஊட்டம் தரும் உளுந்து

nathan

உங்களுக்கு தெரியுமா இளமை பொலிவு தரும் ‘இளநீர்’

nathan

சத்தான சுவையான கொள்ளு பொடி

nathan

கோக் குடித்த ஒரு மணிநேரத்தில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

ஆட்டுக்கறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி!!

nathan

தந்தூரி உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானதா?

nathan