28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
625.500.560.350.160.300.053.80 2
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… ஏசியால் ஏற்படும் சரும வறட்சியை போக்க வேண்டுமா?

பொதுவாக இன்று அலுவலகம் செல்லும் பெண்கள் 9 அல்லது 10 மணி நேரம் வரை ஏசிக் காற்றிலேயே இருப்பதுண்டு.

இதனால் சருமத்துடன் சேர்ந்து கூந்தல், உதடுகள் ஆகியவையும் பாதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி சீக்கிரமே வயது முதிர்ந்த தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

இதனை தடுக்க கிறீம்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கை பொருட்களை கொண்டே இந்த சரும வறட்சியை சரி செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது சரும வறட்சியை போக்கும் எளிய முறைகள் பற்றி பார்ப்போம்.

  • ஒரு நாளைக்குக் குறைந்து 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமான தண்ணீர் குடித்து உடலை நீர்த்தன்மையுடன் வைத்திருந்தால், சரும வறட்சி, மங்கலாக்கிப் பாதிப்பு ஏற்படுத்துவதில் இருந்து தப்பிக்கலாம்.
  • உங்கள் சருமத்துக்கு ஏற்ற திரவத்தன்மையுடன் கூடிய லோஷன்களை ஹேண்ட்பேக்கில் வைத்திருங்கள். இதனை 2 மணி நேரத்துக்கு ஒருமுறையோ, அல்லது சருமம் உலர்வாகத் தோன்றும் சமயத்திலோ எடுத்து அப்ளை செய்யுங்கள்.
  • ஏசி பயன்பாட்டில் அதிக நேரம் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 6 முறையாவது முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
  • ஸ்ப்ரே பாட்டிலில், ரோஸ் வாட்டரை நிரப்பி மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தில் ஸ்ப்ரே செய்துகொண்டால், முகத்தின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். அல்லது ஆல்ஹாகல் சேர்க்காத ஈரத்தன்மையுடன் கூடிய வைப்ஸ் மூலம் அவ்வப்போது முகத்தில் லேசாகத் துடைத்துக்கொண்டால், புத்துணர்வுடன் வைத்திருக்க முடியும்.
  • குளிக்கும்போது சில சொட்டு தேங்காய் எண்ணெய்யை நீரில் சேர்த்து குளிக்கலாம். இது, சருமத்தில் எண்ணெய்ப் பசை இருக்க உதவும். அதேபோல, குளிப்பதற்கு முன்பு தயிரை உடம்பில் தடவி, மிதமான வெந்நீரில் குளித்துவந்தால், வறண்ட சருமம் சரியாகிவிடும்.
  • வேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றைக் கலந்து, முகத்தில் பூசிக்கொண்டால், சருமம் பளிச்சென இருக்கும். 4 பாதாம் பருப்பு அரைத்த விழுதுடன், தேன், பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து, சருமத்தில் பூசுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள்.
  • வாழைப்பழக் கூழுடன் பட்டர் ஃப்ரூட் கலந்து, சருமத்தில் பூசி, ஊறவைத்துக் கழுவுவதன் மூலம் சருமம் மிருதுவாகும்.
  • நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது, இந்த எண்ணெய்யை உடலில் தடவிக்கொள்ளுங்கள்.

Related posts

கவணம்! பூப்பு அடைதலை முன்கூட்டியே தூண்டும் நகப்பூச்சு!

nathan

தேமல் தொல்லை விரட்டும் பூண்டு

nathan

போதிய தண்ணீர் குடிக்காமை எற்படுத்தும் பாதிப்புக்கள் அளப்பரியது!….

sangika

வாரத்தில் மூன்று நாள் இந்த கீரையை தவறாமல் சாப்பிடுங்க!

nathan

பெண்ணுங்க அந்த விஷயத்திற்கு ரெடின்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்

nathan

பெண்களே தளர்ந்த மார்பகங்களை சரிசெய்ய வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகளை வழிமாறிப் போகச் செய்யும் பெற்றோரின் செயல்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தையின்மை கணவன் மனைவி உறவில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

nathan

காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்கள் கட்டாயம் இத படிங்க!….

sangika