23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
154589080
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! பாகற்காய் சாப்பிடவே பயமா இருக்கா? இத படிங்க இனி தினமும் சாப்பிடுவீங்க..!

வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே ஓட்டம் பலர் அலண்டு ஓடிவிடுவார்கள். இதற்கு காரணம் பாகற்காயின் கசப்புத்தன்மை தான்.

பாகற்காய் கசப்பாய் இருப்பதால் தான் என்னவோ அது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகின்றது.

பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும்.

தினமும் சாப்பிட்டு பாருங்கள்… இவ்வளவு நன்மைகளா?154589080
  • பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.
  • தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை
  • தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால், பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலின் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
  • மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், பாகற்காயை வாரத்திற்கு 2-3 முறை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.
  • பாகற்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். ஆகவே அடிக்கடி பாகற்காயை உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
கசப்பைக் குறைக்க சில வழிகள்
  1. பாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொண்டு அதில் சிறிது உப்பு மற்றும் புளித்தண்ணீர் தெளித்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பின்அதில் சேர்க்கப்பட்ட உப்புநீர் தனியே பிரிந்திருக்கும். அதை மட்டும் வடித்துவிட்டு சமைத்தால் கசப்பு போய்விடும்.
  2. மெலிதாக நறுக்கிய பாகற்காயை அரை மணிநேரம் புளி தண்ணீரில் ஊறவைத்து பின் சமைத்தால் புளிப்பு இருக்காது.
  3. மிக மெல்லிய துண்டுகளாக பாகற்காயை நறுக்கிக் கொண்ட பின், கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். அதன்பின் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து சிறிது பிரட்டிவிட்டு சிறிது நேரம் கழித்து சமைக்கலாம். தேவைப்பட்டால் ஆலிவ் ஆயிலுடன் சிறுசிறு துண்டுகளாக பூண்டு அல்லது வெங்காயத்தையும் நறுக்கிப் போடலாம். இது சமைக்கும்போது கசப்புத்தன்மையை நீக்குவதோடு சுவையையும் கூட்டும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வயிறு தட்டையா ஸ்லிம்மா இருக்கணும்னா இந்த இஞ்சி-சீரகத் தண்ணி குடிங்க!

nathan

ஆரோக்கியத்திற்கு சிறந்த சில மதுபானங்கள் – அட, மெய்யாலுமே தாம்பா!!!

nathan

சுவையான குடைமிளகாய் மசாலா

nathan

காராமணி சாண்ட்விச்! செய்து பாருங்கள்…

nathan

உங்களுக்கு தெரியுமா உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கும் அற்புத பானங்கள்!

nathan

ஆண்களின் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan

எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது….

sangika

உங்கள் கவனத்துக்கு உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது நல்லதா?

nathan

உங்களுக்கு தெரியுமா 10 பயங்கரமான உணவு வகைகள்.. சாப்ட்டீங்க.. செத்துருவீங்க!

nathan