28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.0.560.350.160
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு பனிக்காலங்களில் ஏற்படும் வறட்டு இருமலை போக்க வேண்டுமா?

பனிக்காலம் வந்து விட்டாலே போதும் வறட்டு இருமல், மூக்கடைப்பு, காய்ச்சல் என வரிசையாக வந்து கொண்டே இருக்கும். இதனால் பெரிதும் அவதிப்படுவதுண்டு.

வறட்டு இருமல் போன்ற பிரச்சனைக்குத் துளசி பெரும்பங்கு வகிக்கிறது.

இது சித்தமருத்துவத்தில் இருந்து பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகின்றது.

துளசியில் உள்ள நற்குணம் உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தி அதிகரித்து தீங்கு விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிராகப் போராடுகிறது.

மேலும் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களிலிருந்தும் துளசி இலை விடுதலை தருகிறது.

மேலும் நுரையீரல் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் துளசி டீ தினமும் குடித்து வந்தால் நோயிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

அந்தவகையில் பனிக்காலத்தில் ஏற்படும் வறட்டு இருமலை போக்க துளசியில் டீ போட்டு குடிப்பது நல்லது. தற்போது அந்த அற்புத டீயை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
  • 7 முதல் 10 துளசி இலைகள்
  • இரண்டு முதல் மூன்று கிராம்புகள்
  • இரண்டு முதல் மூன்று ஏலக்காய்கள்
  • 300-500 மில்லி தண்ணீர்
  • தேவைப்பட்டால் தேன்625.0.560.350.160
செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக்கொள்ளவேண்டும். பின்பு அது நன்றாகக் கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

தண்ணீர் நன்றாகக் கொதித்தவுடன் அதில் துளசி இலைகளைப் போட வேண்டும். பின்பு கிராம்புகளைச் சேர்க்கவேண்டும். பின்பு ஏலக்காய் சேர்க்க வேண்டும். நன்றாகக் காய்ச்ச வேண்டும்.

5 முதல் 7 நிமிடங்கள் வரை காய்ச்ச வேண்டும்.பின்பு பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து ஆறும் வரை காத்திருக்க வேண்டும். பின்பு நன்றாகக் கலக்கித், தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொள்ளவும்.

தேன் சுவைக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகிறது. எனவே தேன் சேர்க்க விட்டாலும் பரவாயில்லை.

இந்த துளசி டீ வந்தவுடனேயே குடிக்க ஆரம்பித்து விடவேண்டும் ஓரிரு நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் தெரியும் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா? 40+ வயசா? எலும்புத் தளர்ச்சி கவனம்!

nathan

எது காயகல்பம்? நலம் நல்லது

nathan

காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நல்லது இருக்கா..?

nathan

அழகான சருமத்தை பெற திராட்சை பழம்

nathan

பெண்கள் மாதவிடாயின்போது குளிக்கக்கூடாது ?

nathan

பெண்களுக்கு இதயநோய் வருவதை தடுக்கும் பொட்டாசியம் உள்ள உணவுகள்

nathan

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா?

sangika

இத படிங்க மூட்டு வலியை நீக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…!

nathan

பெண்களே தெரிந்துகௌ்ளுங்கள் ! குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படிக் கண்டறிவது?

nathan