30.9 C
Chennai
Sunday, May 26, 2024
201605210732387701 skin cleanse

இதோ ஈஸியான டிப்ஸ். முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்க வேண்டுமா?

சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்க உங்களுக்கு சர்க்கரை ஒன்று போதும். சர்க்கரை முகத்திற்கு நிறத்தை தருவது மட்டுமில்லாமல், முகத்தில் இருக்கும் அழுக்குகள், இறந்த சரும செல்கள் மற்றும் தூசுக்களை நீக்க உதவுகின்றது.
சருமத்தில் தினமும் நாள்தோறும் இறந்த செல்கள் உருவாகி, இறக்கும். இறந்த சரும செல்களானது, சருமத்தில் இருக்கும் துவாரங்கள் வழியே வெளியேறும். அந்த துவாரங்களில் தூசு மற்றும் அழுக்குகள் பதிந்திருந்தால், இறந்த செல்கள் வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். இதனால் சருமம் கடினமாகி, சொரசொரப்புடன் காணப்படும். உங்களுக்கு எளிதில் வயதான தோற்றம் வந்துவிடும். இதை தவிர்க்க உங்களுக்கு சர்க்கரை பேஸ் பேக் உதவுகின்றது.

தேவையானவை:201605210732387701 skin cleanse

சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 சொட்டு
எலுமிச்சை சாறு – 2 சொட்டு.
மேலே குறிப்பிட்ட அளவில் சர்க்கரை, ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். பின்பு இதை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளலாம்.
இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முகம் பளிச்சென்று மாறிவிடும்.
முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கருமை நிறம் நீங்கி முகம் பளபளவென இருக்கும்.
எலுமிச்சை தோல் சருமத்தில், இருக்கும் இறந்த செல்கள் மற்றும் தோள்கள் ஆகியவற்றை நீக்கிவிடும்.
ஆலிவ் ஆயில் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. சர்க்கரை முகத்திற்கு நிறத்தை கொடுக்க உதவுகின்றது.