25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
மருத்துவ குறிப்பு

கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் பொன்னாங்கண்ணி

 

கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் பொன்னாங்கண்ணி இந்த கீரை அனைத்து சூழல்களிலும் வளரும் தன்மைகொண்டதால், எந்தக் காலத்திலும் மிக எளிதாகக் கிடைக்கும். இதில் நிறைய வகைகள் இருந்தாலும் நாட்டுப் பொன்னாங்கண்ணியே சமையலுக்குப் பயன்படுகிறது. இந்தக் கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது.

சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, பீட்டாகரோட்டீன் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாது உப்புக்கள் உள்ளன. பலன்கள்: சிறு குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்சனை இருந்தால், இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடுவதுடன், கண்களுக்குப் பயிற்சியும் செய்துவந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.

கண்களில் நீர்வழிதல், கட்டி, தொற்று, மங்கலான பார்வை போன்ற கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். மாலைக்கண் நோய்கூட குணமாகும். மூளை, நரம்புகள் சீராக இயங்கும். எலும்புகளும் வலிமை பெறும். சருமம் பொலிவுறும். கூந்தல் நன்றாக வளர உதவும்.

டிப்ஸ்: பொன்னாங்கண்ணி இலைகளின் சாறோடு, பசு வெண்ணெய் கலந்து, பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்தால், கண்கள் குளிர்ச்சி அடையும்.  பொன்னாங்கண்ணி யாருக்கும் எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. அனைவரும் சாப்பிடலாம்.

Related posts

மூலநோயின் அறிகுறியும், தடுக்கும் வழிமுறையும்

nathan

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!

nathan

இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கோபம்

nathan

பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வழிகள்!

nathan

கவலை வேண்டாம்.! சுகர் பிரச்சனையை சமாளிக்க முடியலையா?

nathan

தொடை முதல் பாதம் வரை உறுதியாக்க எழுந்ததும் இதை செய்யுங்க

nathan

சூப்பரான கை வைத்தியம்!

nathan

படர்தாமரையை குணமாக்கும் சரக்கொன்றை

nathan

தெரிஞ்சிக்கங்க…தாங்க முடியாத தலைவலியா? இதனை எப்படி இயற்கை முறையில் போக்கலாம்?

nathan