தற்போது ஆன்லைன் மூலம் பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து வாங்குபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைனில் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்…
நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்பவராக இருந்தால் நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளம் நம்பகத்தன்மையானது தானா முதலில் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தகவல்கள் திருபடப்படலாம். நீங்கள் வெளியே ஏதாவது ஓர் இணைய மையத்தில் இருந்து ஆர்டர் செய்பவராக இருந்தால் அங்கு ஸ்கிரீன் கேப்சரிங்க தொழில்நுட்பம் அல்லது சில மென்பொருட்க்ளை பயன்படுத்தியோ அல்லது கிரேடிட் கார்டு தவகல்கள் திருடப்படும் அபாயம் இருக்கிறது.
எனவே வெளி இணைய மையங்களை கூடியமட்டும் தவிர்த்திடுங்கள். சிலசமயம் மொயைல் ஆப்ஸ்களை பயன்படுத்தும்போது அதன் விதிமுறைகளை சரியாக படித்து பாருங்கள். சில ஆப்ஸ்கள் உங்கள் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்றுவிடும். உங்கள் பர்சனல் தகவல்களான செல்போன் எண், ஈ-மெயில் ஐடி, கிரெடிட் கார்டு நம்பர் போன்ற தகவல்கள் இது போன்ற ஆப்ஸ்களால் பிறருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன என்பதை உணருங்கள்.
நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளம் இல்லது ஆப்ஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் அவசியம் படித்து பாருங்கள். ஒருவேளை உங்கள் தகவல் திருடப்பட்டது என நீங்கள் புகார் கூறினால் கூட அதற்கு அவர்கள் ஏற்கனவே எங்கள் விதிமுறைகளை ஏற்றுகொண்டிருக்கிறீர்கள் என்று கூறிவிடுவார்கள்.
நீங்கள் பொருள் வாங்கும் இணையதளத்தில் இருந்து நிபந்தனைகள், விதிமுறைகளை படிக்கும் போது அவை திருப்திகரமானதாக இல்லையெனில் அந்த தளத்தில் ஆர்டர் செய்யாதீர்கள். அவசரம், அவசியம் என்றால் மட்டும் பிரவு சிங் சென்டருக்கு சென்று ஆர்டர் செய்யுங்கள். அதன்பின் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றி விடுங்கள்.
உங்கள் பிரவுசரில் நீங்கள் கடைசியாக பயன்படுத்திய இணையதளங்களில் பட்டியல், அதன் ஹிஸ்டரி பதிவில் இருக்கும். அதை டெலிட் செய்தால் உங்கள் பாஸ்வேர்டு, கிரெடிட் கார்டு நம்பர் ஆகியவை அழிக்கப்பட்டு விடும். ஆன்லைனில் ஆர்டர் கொடுப்பது எளிது தான். ஆனால் எச்சரிக்கை அவசியம்.