​பொதுவானவை

உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சி

உளுந்து, சாமை அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமை அரிசி, உளுந்தை வைத்து எப்படி சத்தான கஞ்சி செய்வது என்று பார்க்கலாம்.

உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சி
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி, உளுந்து – தலா கால் கப்,
பாசிப் பருப்பு – 4 மேஜைக்கரண்டி,
கரைத்து வடிகட்டிய பனை வெல்லக் கரைசல் – 1 கப்,
முதல் தேங்காய்ப்பால் – ஒரு கப்,
இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப்பால் – 2 கப்,
சுக்கு, ஏலப்பொடி – ஒரு தேக்கரண்டி,
தேங்காய்த்துருவல் – 2 மேஜைக்கரண்டி.

செய்முறை :

* சாமை அரிசி, உளுந்து, பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து ரவைபோல் பொடித்து கொள்ளவும்.

* குக்கரில் பொடித்த சாமையை போட்டு அதனுடன் 2, 3-ம் தேங்காய்ப்பால், ஒரு கப் நீர் சேர்த்து, குழைய வேகவிடவும்.

* வெந்ததும் நன்கு மசித்து அதனுடன் முதல் தேங்காய்ப் பால், பனைவெல்லக் கரைசல், சுக்கு, ஏலப்பொடி, தேங்காய்த்துருவல் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் அடிபிடிக்காமல் நன்றாக கலக்கி இறக்கவும்.

* சத்தான சாமை உளுத்தங்கஞ்சி ரெடி.

* சூடாகப் பருகினால் சுவையாக இருக்கும்.201702040906496420 samai rice dal kanji millet dal coconut milk kanji SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button