30.8 C
Chennai
Monday, May 20, 2024
2016111908380250

ஒரே மாதத்தில் எடையை குறைக்கும் அற்புத பானம்! அப்ப தினமும் செய்யுங்க…

பொதுவாக காய்கறிகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சத்துக்கள் அடங்கியிருக்கும்.

அதேப் போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான காய்கறிகள் பிடிக்கும். அப்படி பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் காய்கறி தான் பீட்ரூட்.

பீட்ரூட் இனிப்பான ஓர் காய்கறி என்பதால், சிலர் இதனை ஜூஸ் செய்து குடிப்பார்கள். அதோடு பீட்ரூட் ஜூஸ் உடலினுள் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

முந்தைய காலத்தில் பீட்ரூட்டின் இலைகள் மட்டும் தான் ஆரோக்கியமானது என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இந்த ஒட்டுமொத்த காயிலும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடல் எடை கூடி கொண்டே போனால், நாம் நிச்சயம் கவலை பட கூடும். உடல் எடையை சீராக பார்த்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். உடல் பருமன் உயர்ந்தால் அது நம் ஆரோக்கியத்திற்கு மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

எடையை குறைக்க பல வழிகளை நாம் பயன்படுத்தி சோர்ந்து போயிருப்போம்.இனி இந்த சோர்வை தூக்கி எறிய ஒரு அற்புத வழி முறை இருக்கிறது.

அது என்னவென்றால், பீட்ரூட் தான். பீட்ரூட்டுடன் வேறு சில உணவுகளை சேர்த்து உண்டால் உடல் எடை சட்டென குறைந்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆப்பிள் மற்றும் பீட்ரூட், இவை இரண்டிலுமே மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கின்றன.

உடல் பருமனால் அவதிப்படுவோருக்கு இந்த ஜுஸ் அருமையான தீர்வாம்.

தேவையானவை
  • நறுக்கிய ஆப்பிள் 1 கப்
  • நறுக்கிய பீட்ரூட் 2 கப்
  • சிறிது இலவங்க பொடி
  • சிறிது கருப்பு உப்பு (அ) சாதாரண உப்பு
செய்முறை

ஆப்பிள் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவைக்கேற்ப சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம். பிறகு இவற்றுடன், சிறிது இலவங்க பொடி மற்றும் உப்பு சேர்த்து கொண்டு நன்றாக கலக்கி குடித்து வரவும்.

இந்த ஜுஸை 1 மாதம் தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.