27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
மருத்துவ குறிப்பு

வைட்டமின் குறைபாடு உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்

 

வைட்டமின் குறைபாடு உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் வைட்டமின்கள் உணவில் கிடைக்கும் ஒரு வகை கூட்டுப் பொருள். உடலின் ஆரோக்யத்திற்கு இவை சிறிய அளவே தேவைப்படுகின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றது. அவை, கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் – ஏ, டி, ஈ, கே. தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் – பி1, பி6, பி7, பி12 பிரிவுகள், வைட்டமின் சி. வைட்டமின் குறைபாடுகள் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

வைட்டமின்கள் எரிசக்தி போல் அதிக அளவில் தேவைப்படாது. இருப்பினும், மருத்துவர்கள் சில சமயங்களில் வைட்டமின் மாத்திரைகளை சிபாரிசு செய்கின்றனர். மூன்று விஷயங்களுக்காக இது சிபாரிசு செய்யப்படுகின்றது.

* உடலில் காணப்படும் வைட்டமின் சத்து குறைபாடு.

* குறைபாடு ஏற்படக் கூடிய காலங்களை தவிர்க்க. (உ.ம்) கர்ப்ப காலம், அறுவை சிகிச்சை, நோய் பாதிப்பு.

* சில நோய் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன் நடவடிக்கையாக. மருத்துவரின் அறிவுரையின் பேரிலேயே வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சைவ உணவு உண்பவர்களுக்கு கண்டிப்பாக வைட்டமின் பி12 சத்து மாத்திரை தேவைப்படும். அன்றாடம் வைட்டமின் சத்து என்பது இன்சூரன்ஸ் பாலிஸி போன்றது. ஆகவேதான் ஒரு மல்டி வைட்டமின் என்பது அதிக சிபாரிசு பெறுகின்றது.

பொதுவாக :

* ஆரோக்கியமான உணவிவை உட்கொள்ளுங்கள்.

* மருத்துவ ஆலோசனையோடு ஒரு சத்து மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்.

* வைட்டமின் ‘டி’ சத்து தேவையா என அறிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

* மிக அதிக அளவிலான வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது சரியாகாது.

நீரில் கரையும் வைட்டமின்கள் :

9 வகை வைட்டமின்கள் நீரில் கரைபவை.

* போலேட் எனப்படும் இந்த வைட்டமின் பிறவி குறைபாடுகளை நீக்கும்.

* தயமின் எனப்படும் பி1 குறைபாட்டால் சோர்வு, நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு ஏற்படும். ஓட்ஸ், கைகுத்தல் அரிசி, காய்கறி, உருளைக்கிழங்கு, முட்டை இவற்றிலிருந்து இந்த வைட்டமின் கிடைக்கும்.

* ரிபோப்ளேவின் எனப்படும் பி2 குறைபாட்டால் நாக்கு வீக்கம், வாய் ஓரத்தில் புண் ஏற்படும். இந்த வைட்டமின் பால் பொருட்கள், வாழைப்பழம், பச்சை வாழைப்பழம் இவற்றில் கிடைக்கும்.

* நியாசின் எனப்படும் பி3 சரும பாதுகாப்பு, ஜீரண செயல்பாடுமுறை, கெட்ட கொழுப்பு நீக்குதல் போன்றவற்றை கொடுக்கும். ஆயினும் அதிகம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். அசைவம், மீன், முட்டை, காய்கறி இவற்றில் பி3 வைட்டமின் சத்து கிடைக்கும்.

* பன்டோதினிக் ஆசிட் எனப்படும் பி5 வைட்டமின் உடல் உணவிலிருந்து சத்து எடுத்துக் கொள்ள உதவும். சில ஹார்மோன்கள், கொலஸ்டிரால் உருவாக்கவும் உதவுகின்றது. குறைபாடு ஏற்படும் பொழுது பராஸ்திஷியா என்ற பாதிப்பு ஏற்படும். வைட்டமின் பி5 அதிகமானால் வயிற்றுப் போக்கு, பிரட்டல், நெஞ்நெரிச்சல் பி5 சத்து அசைவ உணவு, மீன், முட்டை, காய்கறி இவற்றிலிருந்து கிடைக்கின்றது.

* பிரிடாக்ஸின் எனப்படும் பி6 வைட்டமின் சத்து உடலின் ரசாயன மாற்றங்களுக்கு உதவுகின்றது. இரத்த சோகை இதன் குறைபாட்டால் ஏற்படும். இந்த சத்து அதிகமானால் நரம்பு பாதிப்பு ஏற்படும். அசைவம் காய்கறி, கொட்டைகள், வாழைப்பழம் இவற்றில் பி6 வைட்டமின் சத்து கிடைக்கிறது.

* பயோடின் எனப்படும் பி7 வைட்டமின் சத்தில் குறைபாடு ஏற்பட்டால் சரும பாதிப்பு, குடல் பாதிப்பு ஏற்படும். முட்டை, கடலை, கீரை இவற்றில் எளிதாய் இச்சத்து கிடைக்கும்.

* சயன கோபாளமின் எனப்படும் வைட்டமின் பி12 ரத்த அணுக்கள் நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றுக்கு அத்தியாவசமானது. இதன் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும். அசைவ உணவிலேயே இது அதிகம் கிடைக்கின்றது.

* வைட்டமின் சி தான் உடலில் அதிகமாக காணப்படும் கொலாஜன் எனப்படும் புரதம் உருவாக காரணம் ஆகின்றது. பல், சருமம், எலும்பு, ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த வைட்டமின் மிகவும் அவசியமாகின்றது. பழங்கள், காய்கறிகள், கல்லீரல் இவற்றில் அதிகம் கிடைக்கின்றது. ஆய்வுகள் பி வைட்டமின் பிரிவுகள் ஞாபகத்திறனை காப்பதாகக் கூறுகின்றன.

இதே போன்று வைட்டமின் சி, ஈ, பீட்டாகரோட்டின் இவைகளும் மூளை நரம்புகளை காத்து வலிவூட்டுகின்றன. ஆயினும் ஆய்வுகள் கீரை, பருப்பு, ஆரஞ்சு, சோயா இந்த மாதிரி உணவுப் பொருட்களின் மூலம் பெறுவதையே வலியுறுத்துகின்றன. வைட்டமின் பி பிரிவு குறைபாடுகளை சோர்வு, அதிக படபடப்பு, வெளிர்ந்த சருமம், வறண்ட நாக்கு, ஈறில் இரத்த கசிவு, வயிறு பாதிப்பு, எடை குறைதல் போன்ற அறிகுறிகளின் மூலம் அறிய முடியும்.

அதிக வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் ஆபத்தே என்பதனை நன்கு உணர வேண்டும். வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகியவை கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகும். இவை அதிக நாட்கள் உடலில் தங்கும். அதிக அளவு எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

வைட்டமின் ஏ :

ரெடினால் என்றும் சொல்லப்படும். இந்த வைட்டமினுக்கு உடலில் பல வேலைகள் உள்ளன. அதிக வெளிச்சம், குறைந்த வெளிச்சம் இவற்றிக்கு கண் தன்னை சரி செய்து கொள்வது இந்த வைட்டமினால்தான். எலும்பு வளர்ச்சி, பல் வளர்ச்சி, திசுக்களின் வளர்ச்சி நோய் எதிர்ப்பு சக்தி இவை அனைத்திற்கும் இந்த வைட்டமின் பொறுப்பு.

சருமம், கண், வாய் உள்தசை, மூக்கு, தொண்டை, நுரையீரல் இவை ஈரப்பதத்தோடு இருப்பதும் இந்த வைட்டமினையே சார்ந்துள்ளன. மேலும் ஒரு சில வகை புற்று நோய்களையும் வைட்டமின் ‘ஏ’ தவிர்க்கும். பல வகை உணவுகள் உண்ணும் பொழுது அதாவது பால் பொருட்கள், மீன், கல்லீரல் இவற்றிலிருந்து வைட்டமின் ஏ கிடைக்கின்றது.

தாவர வகையிலிருந்து அடர்ந்த பச்சை நிறம் கொண்ட இலைகள், காய்கறிகள், காரட், பரங்கிகாய் இவையெல்லாம் வைட்டமின் ‘ஏ’ கிடைக்கும் உணவுப் பொருட்கள். சராசரி தேவையாக ஆணுக்கு 900 மைகி 1 பெண்ணுக்கு 700 மைகி அளவு இது தேவைப்படுகின்றது. வைட்டமின் ‘ஏ’ கல்லீரலில் தேக்கி வைக்கப்படுகின்றது.

அதனால் தான் இச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது 2 வருடம் வரை கூட அறிகுறிகள் தெரிவதில்லை. இரவு கண் தெரியாமை, சொரசொரப்பான வறண்ட சருமம், எளிதில் உடல் நோய் வாய் படுதல், எலும்பு வளர்ச்சி குறைபாடு போன்றவை வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் ஏற்படும் நோய்கள். வைட்டமின் ‘ஏ’ அதிகம் இருந்தால்; அதாவது அன்றாடம் 3000 மைகி மேல் உடல் பெற்றால் வறண்ட சருமம், அறிக்கும் சருமம், தலைவலி, வயிற்றுப் பிரட்டல், பசியின்மை, பார்வை சரியின்மை, தலைசுற்றல், இடுப்பு எலும்பு முறிவு போன்றவை ஏற்படும்.

வைட்டமின் டி:

உடல் உபயோகத்திற்கான கால்ஷியம், பாஸ்பரசில் வைட்டமின் டி மிக முக்கிய பங்காற்றுகின்றது. சிறு குடலில் இருந்து நன்கு கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் உருவாகவும், பாதுகாக்கப்படவும் இந்த வைட்டமின் ‘டி’யே காரணமாகின்றது. திசுக்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகின்றது.

குழந்தைகளுக்கு நல்ல எலும்பும், பல்லும் பெற வைட்டமின் ‘டி’ மிக அவசியம். பால், பால் பொருட்கள், மீன், மீன் எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின் ‘டி’ கிடைக்கின்றது. இத்தோடு சூரிய ஒளியில் சருமமே வைட்டமின் ‘டி’யை உற்பத்தி செய்கின்றது. ஒரு வயது முதல் ஐம்பது வயது வரை ஒருவருக்கு 15 மைகி வைட்டமின் ‘டி’ தேவைப்படுகின்றது.

இளம் காலை வெயில், மாலை வெயில் பொழுதில் கை, கால், முகத்தில் வெயில் படும் படி 10 நிமிடங்கள் இருக்கலாம். அதிக நேரம் வெயிலில் இருப்பவர்கள் ‘சன் ஸ்கீரின்’ அவசியம் உபயோகிக்க வேண்டும். வைட்டமின் ‘டி’ குறைபாடு ஏற்படும் பொழுது குழந்தைகளுக்கு ரிக்கட்ஸ் எனப்படும் வளைந்த கால்கள், பெரியோருக்கு எலும்பு அடர்த்தி குறைதல் ஏற்படுகின்றது.

குழந்தைகளுக்கு பின் தலை தட்டையாகின்றது. புற்று நோய் பாதிக்கும் அபாயம் அதிகமாகின்றன. ரத்தக் கொதிப்பு, நோய் பாதிப்பு எளிதில் ஏற்படுகின்றது.

* குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் தாய்பால் மட்டும் பெறும் சிறு குழந்தைகள்.
* அடர்ந்த நிறம் கொண்டோர்
* முதியோர்
* நோயாளிகள் ஆகியோருக்கு வைட்டமின் ‘டி’ குறைபாடு ஏற்படுகின்றது. அதிக அளவு வைட்டமின் ‘டி’ ரத்தத்தில் அதிக கால்ஷியம், உடல், மன வளர்ச்சி குறைவு, வயிற்று குமட்டல், வாந்தி இவற்றினை ஏற்படுத்தும்.

வைட்டடமின் ஈ :

வைட்டமின் ஈ உடலில் வைட்டமின் ஏ,சி, சிகப்பு அணுக்கள் நல்ல அமினோ அமிலங்கள் இவற்றை காக்கின்றது. நல்ல பழங்கள், காய்கறிகள் மூலமே இவற்றைப்பெற முடியும் என சமீபத்திய ஆய்வுகள் வலியுறுத்துகின்றன. சூரிய காந்தி எண்ணெய், சோயாபீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் இவைகள் மூலம் வைட்டமின் ஈ சத்து கிடைக்கின்றது. ஆணும், பெண்ணும் 14 வயதிற்கு மேல் 15 மைகி அளவு அன்றாடம் வைட்டமின் ஈ பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

வைட்டமின் கே :

வைட்டமின் கே பாக்டீரியாவால் குடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றது. ரத்தம் கெட்டிப்பட, எலும்பின் ஆரோக்கியம், ரத்தம், எலும்பு, சிறுநீரகம் இவற்றிக்கான புரதம் அளிக்க உதவுகின்றது. முட்டை கோஸ் பச்சை முட்டைகோஸ், காலிப்ளவர், பச்சை நிற இலைகள், தாவர எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின் கே கிடைக்கின்றது. போதுமான அளவு வைட்டமின் கே உடலில் இல்லை எனில் சிறு காயத்திலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு வைட்டமின் கே. குறைபாடு ஏற்படும். மிக அதிக அளவு வைட்டமின் கே; திசுக்களுக்கும் கல்லீரலுக்கும் பாதிப்¬ப ஏற்படுத்தும்.

தெரிந்துகொள்ளுங்கள்….

* கொழுப்பில் கரையும் வைட்டமின் ஏ,டி,ஈ,கே இவை நீண்ட காலம் உடல் சேகரிப்பில் இருக்கும்.

* லீட்டா கரோட்டினை உடல் வைட்டமின் ‘ஏ’வாக மாற்றும். இது காய்கறி பழங்களில் அதிகம் உள்ளது.

* குறைவான வைட்டமின் டி, உடலுக்கு தேவையான சூரிய வெளிச்சம் இன்மை இவை இன்றைய மருத்துவ பொதுநல கவலையாக உள்ளது. வைட்டமின் ஈ உடலின் பாதுகாப்பு.

* குடலில் உள்ள பாக்டீரியாக்களால் உருவாகும் வைட்டமின் கே, கீரைகளில் அதிகம் உள்ளது.

Related posts

உடல் ஆரோக்கியத்திற்கு மருந்தாகும் நல்லெண்ணெய்

nathan

உங்களுக்கு தெரியுமா மக்கள் ஏன் வாயு’வை வெளியேற்றுகிறார்கள்? அப்ப இத படிங்க!

nathan

தொல்லை தரும் வயிற்று நோய்களை போக்கும் கொத்தமல்லி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க… கருப்பை புற்றுநோயாக இருக்கலாமாம்!

nathan

தூதுவளை மருத்துவ பயன்கள்! ~ பெட்டகம்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! கருக்குழாய் கருத்தரிப்பு, கருக்குழாயில் உண்டாகும் பாதிப்பு,

nathan

இரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்பிடலாமா?கண்டிப்பாக வாசியுங்க….

nathan

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்.!

nathan