31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

வயது அடிப்படையில் பெண்களுக்கு குழந்தைப்பேறு குறையும் காலகட்டங்கள்

முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் படிப்படியாக குறையத் தொடங்கும்.

வயது அடிப்படையில் பெண்களுக்கு குழந்தைப்பேறு குறையும் காலகட்டங்கள்
இன்றைய கால கட்டத்தில் அனைவரும் இயந்திரங்களாக தான் வாழ்ந்து வருகிறோம். பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, அனைவரின் வாழ்வின் முக்கியமான தருணம் குழந்தைப் பேறு. இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தைப் பேறு அவ்வாறு கிடையாது.

குழந்தை பேறை தள்ளிப்போடக்கூடாது. இளம் தலைமுறையினர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் குழந்தை பெற்று கொள்வதை சுமை என்று கருதி அதை தள்ளி போடுகின்றனர். ஏனெனில் வயது ஏற ஏற குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைந்து கொண்டே வரும். அதை நினைவில் வைத்து இன்றைய இளம் தலைமுறையினர் அந்தந்த காலகட்டத்தில் குழந்தை பெற்று கொள்ளுங்கள். இருபது வயது ஆரம்பத்தில் ஒரு பெண்ணிற்கு பத்து லட்சத்தில் இருந்து இருபது இலட்சம் வரை முட்டைகள் கருவில் உருவாகின்றன. இதில், ஒரு லட்சத்தில் இருந்து இரண்டு லட்சம் முட்டைகள் கருத்தரிக்க நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

அதேப்போல தான் ஆணிற்கும் விந்தில் அதிக சக்தியும், வேகமும் இருக்கும். இவை தான் கருத்தரிக்க உதவும். இருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண், பெண் இருவரும் 1௦௦ சதவீதம் குழந்தைப்பேறுக்கான உடல் மட்டும் மன தகுதியோடு இருகின்றனர். கருத்தரிக்க இந்த வயது தான் ஏற்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இருபதுகளின் கடைசிகளில் பெண்களுக்கு கருத்தரிக்க வேண்டிய உடல் வலிமை குறைய ஆரம்பித்துவிடும். ஆயினும் கருத்தரிக்க 75 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில், ஆணின் விந்தணுவின் உற்பத்தியும் வேகமும் குறைவதில்லை என்பதே ஆகும்.

முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் படிப்படியாக குறையத் தொடங்கும். இது தான் பெண்களுக்கு முப்பது வயதுகளில் குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகள் குறைய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முப்பதுகளின் கடைசி தருணங்களிலேயே குரோமோசோம் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமல்லாது, ஆணின் விந்தணுவின் வேகமும் குறைந்துவிடும். இதனால், கிட்டத்தட்ட குழந்தைப் பேறுக்கான 5௦ சதவீத வாய்ப்பு இருக்கும் என்பதே மிகவும் சிரமம் தான்.

இயல்பாகவே நாற்பதில் இருந்து நாற்பத்தி ஐந்து வயதிற்குள் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயே நின்று விடுகிறது. அப்படியே கருமுட்டை உருவாகினாலும் வலிமை குறைவாக தான் இருக்கும். அதே சமயம், ஆணின் விந்து உற்பத்தியும், வேகமும் குறைவாக தான் இருக்கும். இதனால் நாற்பதுகளில் குழந்தைப் பேறு பெறுவது என்பது மிகவும் சிரமம் தான்.

மிக சில பெண்களுக்கு மட்டுமே இந்த வயதில் குழந்தைப்பேறு அடைய வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும், சிலருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகளின் மூலமாக கருத்தரிக்க செய்கின்றனர். கருமுட்டையின் வலுவின்மையும், மாதவிடாய் முடியும் தருவாய் என்பதாலும் கருத்தரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. மற்றும் ஆணின் விறைப்பு தன்மை மற்றும் வேகம் மிகவும் குறைந்திருக்கும். இந்த தருவாயில் குழந்தைப்பேறு அடைவது மிக மிக குறைகிறது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…தேமல் நோய் வருவதற்கான காரணமும்.. தீர்க்கும் வழிமுறைகளும் இதோ

nathan

உங்கள் ஆரோக்கியத்தை அழிக்கும் தினசரி பழக்கங்கள்!!!

nathan

மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

sangika

உங்களுக்கு தெரியுமா கீழாநெல்லியின் முழு மருத்துவப் பயன்களும் இவை தான்….

nathan

மலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்!

nathan

கற்றாழை சாறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்

nathan

உங்கள் மார்பகங்களின் அளவு மற்றும் வடிவம் மாறும் 6 நிலைகள்

nathan

உங்க உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைத்தால் என்னாகும் தெரியுமா! மருத்துவர் கூறும் தகவல்கள்..

nathan

உங்களுக்கு தெருயுமா வயிற்றில் கொழுப்பை தங்கி தொப்பையை உண்டாக்கும் 12 பழக்கவழக்கங்கள்!!!

nathan