நோயின் பாதிப்புகள் ஏற்படும் முன் சில அறிகுறிகள் தென்படுவது இயல்பு. அதன்படி சில அறிகுறிகள் எந்த நோய் உள்ளதை குறிக்கிறது என்பதை பார்க்கலாம்.
கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுந்தால் அது இதயத்தில் ஏதொவொரு பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.
முகத்தில் அரிப்பு அல்லது நமைச்சல் இருந்தால் அதற்கு கூந்தல் சுத்தமில்லை என்று அர்த்தம்.மேலும் உடலில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்து இருந்தாலும் அரிச்சல் ஏற்படும்.
முதுகுத்தண்டு அல்லது இடுப்பு பகுதியில் தொடர்ந்து வலி ஏற்பட்டால், அது எலும்புகள் தேய்மானம் அடைய தொடங்குகிறது என்று அர்த்தம்.
உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி உணர்வு ஏற்பட்டால் அது நீரழிவு நோயின் தொடக்கம் என்று அர்த்தம்.
கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால் அது உடலில் அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பம் இருக்கிறது என்று அர்த்தம்
தோள்பட்டை, முதுகு, குதிக்கால் போன்ற உறுப்புகளில் இறுக்கம் அல்லது வலி ஏற்பட்டால், அது வாயு தேக்கம் அதிகமாக உள்ளது என்பதன் அறிகுறியாகும்.
வயிற்றில் வலி, பேதி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என்பதை உணர்த்துகிறது.
கண்கள், மூக்கு தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால், அதற்கு ஜலதோஷம் வர போகிறது என்று அர்த்தம். காதில் அதிக குடைச்சல் அல்லது வலி வந்தால், அது காய்ச்சல் வர போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
உதடு மற்றும் மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது உடலில் நீர்ச்சத்து மற்றும் எண்ணெய்ப்பசை குறைந்து விட்டது என்று அர்த்தம்.