24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
pregnancy women health
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களுக்கான சில ஆலோசனைகள்..! சீக்கிரமாக கர்ப்பமடைவது எப்படி?

பல பெண்கள் இன்று அவர்களது அறியாமையால், தான் கருவுற்றிருகின்றோமா இல்லையா என்று தெரியாமல், தவறான புரிதலோடு இருகின்றனர்.

பல பெண்கள் குழந்தை பேரு எப்படி பெறுவது என்பதை பற்றின விழிப்புணர்வு இல்லாமல் இருகின்றனர். இதனால் அவர்கள் கர்ப்பம் அடையும் காலம் தள்ளிப்போவதோ அல்லது, சரியாக கருவுற முடியாமல் போவது வழக்கமாகிவிடுகின்றது. இதனை தவிர்க்க பெண்களுக்கு(women) போதிய விழிப்புணர்வு தேவைப்படுகின்றது.

பல பெண்கள் இன்று அவர்களது அறியாமையால், தான் கருவுற்றிருகின்றோமா இல்லையா என்று தெரியாமல், தவறான புரிதலோடு இருகின்றனர். இது அவர்கள் சரியாக கருவுற முடியாத ஒரு சூழலையும் உண்டாக்குகின்றது. நீங்கள் சில அடிப்படை விடயங்களை தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தகவல்கள்:

* கர்ப்பம் அடைவதற்கான காலம் பொதுவாக உங்கள் மாதவிடாயின் முதல் நாள் தொடங்கி அடுத்த மாதவிடாயின் முதல் நாள் வரை இருக்கும்.

* கரு முட்டைகள் மாதம் ஒரு முறை முதிர்ச்சி அடைகின்றது

* கருவுற்ற முட்டைகளைத் தயார் செய்ய உங்கள் கருப்பையின் புறணி தடிமனாகத் தொடங்குகிறது

* முட்டை முதிர்ச்சி அடைந்த பின், கருப்பையில் இருந்து வெளியேற்றப் படுகின்றது, இதுவே அண்டவிடுப்பு என்று அழைக்கப்படுகின்றது

* அண்டவிடுப்பின் போது உங்கள் கர்ப்பப்பை வாய் சளி (இது உங்கள் கருப்பை வாயில், யோனி மற்றும் கருப்பைக்கு இடையில் உள்ள பொருள்) மெல்லியதாகவும் தெளிவாகவும் மாறும், இதனால் விந்தணுக்கள் முட்டையை நோக்கி எளிதாக நீந்தி செல்ல முடியும்

* அண்டவிடுப்பின் கட்டத்தில் விந்து இருந்தாளோ, அல்லது அடுத்த 24 மணி நேரத்தில், முட்டை கருவுற்றிருக்கும் (pregnant) வாய்ப்பு உண்டாகின்றது. இது நடக்க ஒரு விந்து மட்டுமே முட்டையுடன் சேர வேண்டும்

* முட்டை கருவுற்றிருந்தால், அது கருப்பை நோக்கி நகர்ந்து அதிக உயிரணுக்களாகப் பிரியத் தொடங்குகிறது.

* இது கருப்பையை அடைந்ததும் கருவுற்ற முட்டை கருப்பையின் புறணியை இணைக்க வேண்டும். இது உள்வைப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது கர்ப்பத்தின் தொடக்கமாகும்.

* பல கருவுற்ற முட்டைகள் இதனுடன் பொருத்தப்படாமல், உடலுக்கு வெளியே அனுப்பப்படுகின்றன.

* முட்டை கருவுறாவிட்டால், அது மீண்டும் உடலால் உறிஞ்சப்பட்டு, ஹார்மோன் அளவு குறைகிறது. மேலும் கருப்பைப் புறணி சிந்தப்படுகிறது – உங்கள் அடுத்த மாதவிடாயின் தோத்க்கமாகும்

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள சிறந்த நேரம் (Pregnancy Is The Best Time For Sex )

பெண்கள் விரைவாக கருவுற வேண்டும் என்றால், அதற்கு சரியான நேரத்தை உடலுறவு கொள்ள தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த வகையில், இங்கே சில தகவல்கள்:

* கருவுறும் வாய்ப்பை அதிகபடுத்த முதலில், நீங்கள் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்ள வேண்டும். இதனால், ஆரோக்கியமான விந்தணு முட்டையுடன் சேர வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்

* உங்கள் மாதவிடாய் காலத்தை கணக்கில் கொண்டு, முட்டைகள் முழு வளர்ச்சி பெற்றிருக்கும் நாட்களை கணக்கில் கொள்ள வேண்டும். அந்த காலகட்டத்தில், நீங்கள் கருவுறும் முயற்சிகளை செய்யலாம். இது கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும்

* பொதுவாக உங்கள் மாத விடை ஏற்படுவதற்கு 12 முதல் 16 நாட்கள் உள்ள காலகட்டம் கருவுற ஏற்ற காலமாகும்

கருவுறும் வாய்ப்பை பாதிக்கும் காரணங்கள்

அனைத்து பெண்களுக்கும் இது இயல்பாக எழும் கேள்வி தான். தான் கருவுற உள்ள சாத்தியங்கள் மற்றும் கருவுற முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் எவ்வளு உள்ளன என்று தெறித்து கொள்ள நினைப்பார்கள். அந்த வகையில், நலல் ஆரோக்கியமாக இருக்கும் தம்பதியினர்கள், கருவுறும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றனர். எனினும், அப்படி கருவுற முடியாமல் போனால், அதற்க்கான வாய்ப்புகள் 15% முதல் 25% மட்டுமே இருக்கும்.

எனினும், ஒரு பெண் கருவுற முடியாமல் போவதற்கு சில குறிப்பிடத்தக்க காரணங்கள் உள்ளன. அவை:

* 30 வயதுக்கு மேலாகும் பெண்களுக்கு கருவுறம் வாய்ப்புகள் 3௦ வயதுக்கு கீழ் இருக்கும் பெண்களை விட குறைவாக இருக்கும்

* இந்த சதவிதம் 40 வயது பெண்களுக்கு மேலும் குறையும்

* சீரற்ற மாத விடை மேலும் கருவுறும் காலத்தை பாதிக்கின்றது. இதனால் சரியான உடலுறவு கொள்ளும் நாட்களை கணக்கிட முடியாமல் போகலாம்

* நீங்கள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்கிறீர்கள் எனபதை பொருத்தும், கருவுறும் வாய்ப்புகள் அதிகமாகின்றது. குறைந்த அளவே அல்லது வெகு சில நாட்களே உடலுறவு கொள்கின்றீர்கள் என்றால், கருவுறும் வாய்ப்பும் குறையும்

* நீங்கள் எத்தனை காலம் கருவுறம் முயற்சியில் உள்ளீர்கள் என்பதும் இதில் அடங்கும். நீங்கள் ஒரு ஆண்டு காலம் முயற்சி செய்தும் கருவுறவில்லை என்றால், நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும்

* நீங்கள் ஏதாவது மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ அல்லது உங்களுக்கு உடலில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும், உங்கள் கருவுறும் வாய்ப்பு பாதிக்கப்படும்

கற்பகாலத்தின் தொடக்க அறிகுறிகள் (Early Symptoms Of Pregnancy)

ஓவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பம் தரித்ததன் அறிகுறி மாறுபடும். எனினும், பொதுவாக சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் விழிப்புணர்வோடு இருக்கலாம். இங்கே உங்களுக்காக அந்த தகவல்கள்;

* முதல் அறிகுறியாக உங்கள் மாத விடாய் ஏற்படாது

* மார்பகங்கள் மிருதுவாகவும், அல்லது வீக்கம் உள்ளது போலவும் தோன்றும்

* வாந்தி மற்றும் கொமட்டல் ஏற்படும்

* உடலில் அதிக சோர்வு உண்டாகும்

* ஒரு சிலருக்கு உடலில் வீக்கம் உண்டாகும்

* மல சிக்கல் உண்டாகும்

* அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்

இதில் சில அறிகுறிகள், உங்கள் உடலில் வேறு சில பிரச்சனைகள் இருந்தாலும் உண்டாகலாம். அதனால், உங்கள் கர்ப்பத்தை உறுதிபடுத்திக் கொள்ள, கர்ப்ப பரிசோதனை செய்து கொள்வது நல்லது.-source: maalaimalar

Related posts

அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதால் எவ்வளவு மருத்துவபலன்கள் தெரியுமா?

nathan

போதிய தண்ணீர் குடிக்காமை எற்படுத்தும் பாதிப்புக்கள் அளப்பரியது!….

sangika

Health-ஐக் கொண்டு Wealth-ஐப் பெருக்க… 6 அற்புத வழிகள்!

nathan

இதில் உங்க ராசி இருக்கா? மிகப் பெரிய செல்வந்தராகும் யோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இருக்கு!

nathan

பெண்ணின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் ‘யீஸ்ட்’ பூஞ்சை தாக்குதல்

nathan

ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்!!

nathan

தூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று

nathan

பெற்றோர்களே தெரிஞ்சிக்கங்க…கோபமாக இருக்கும் போது பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்லக்கூடாதவைகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், பிட்டாகவும் இருக்க 10 சிறந்த வழிகள்!!!

nathan