25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
மருத்துவ குறிப்பு

உடல் ஆரோக்கியத்தை காக்க ஆயில் புல்லிங் செய்யுங்க

உடல் ஆரோக்கியத்தை காக்க ஆயில் புல்லிங் செய்யுங்க
நல்லெண்ணெய்யைக் கொண்டு சமையல் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அத்தகைய நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது ‘ஆயில் புல்லிங்’ என்று கூறப்படுகிறது.இதனால் உடலில் உள்ள நோய்களும் குணமாகின்றன. இத்தகைய ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், பல் துலக்கியதும் சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும்.இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்கவும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெய்யின் தன்மை இருக்கும். பின்னர் நீரினால் வாயையும், பற்களையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் இதனை நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம்.மூன்று முறையும் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். ஆயில் புல்லிங் செய்வதால் மூட்டு வலி, முழங்கால் வலி, இருமல் மற்றும் சளி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு, குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்துகிறது.

மேலும் தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. அதிலும் ஒற்றைத் தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை. நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்கவாதம், நரம்பு சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.

Related posts

தரமான சானிட்டரி பேட் பயன்படுத்துங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் 3 துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

உங்க பெற்றோருக்கு மாரடைப்பு வரப்போகுது என்பதைக் குறிக்கும் ஆரம்ப அறிகுறிகள்

nathan

வாயு உபாதைகளுக்கு ஓமம்

nathan

கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம் தெரியுமா ???

nathan

இதயம் பலவீனமா இருக்கான்னு கண்டுபிடிக்கும் எட்டு அறிகுறிகள் இதுதான்

nathan

கருச்சிதைவு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

nathan

ஜப்பானியர்கள் தொப்பையின்றியும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதன் ரகசியம் தெரியுமா?

nathan

வெங்காயத்தை வீட்டிலேயே எளிமையாக வளர்ப்பது எப்படி?

nathan