25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 garlic
ஆரோக்கிய உணவு

ஹெல்த் ஸ்பெஷல்! நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!

சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி, சிவப்பு திராட்சை மற்றும் ப்ளூபெர்ரி பழங்களில் காணப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற பாலிஃபீனால் கூட்டுப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இருப்பினும் அவைகள் இந்தியாவில் சுலபமாக கிடைக்குமா? என்றால் இல்லை என்ற பதில் தான் வரும்.

ஆனால் அது தவறு. ஏனெனில் இந்தியாவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் பல உள்ளன. அப்படி எளிதில் கிடைக்கக்கூடிய அதுவும் விலை அதிகமில்லாதது. இப்போது அவ்வகை உணவுகளைப் பற்றி பார்க்கலாமா…

வைட்டமின் சி உணவுகள் இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான வைட்டமின் சி, குருதி வெள்ளையணுக்களை தங்கள் வேலையான தொற்றுக்களை ஆற வைப்பதை வேகமாக செய்ய வைக்கும். அதனால் நோய…

வைட்டமின் சி உணவுகள்

இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான வைட்டமின் சி, குருதி வெள்ளையணுக்களை தங்கள் வேலையான தொற்றுக்களை ஆற வைப்பதை வேகமாக செய்ய வைக்கும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். கொய்யாப்பழத்தில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இது அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களை எதிர்த்து போராடும். ஆகவே ஆரஞ்சு, கொய்யாப்பழம், எலுமிச்சை போன்றவற்றை வாங்கி உட்கொள்ளுங்கள்.

பூண்டு

பாக்டீரியா மற்றும் வைரல் தொற்றுக்களை எதிர்த்து அழற்சி விளைவிப்பதை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது பூண்டு. இது தவிர இதய நோய்கள் மற்றும் அதிக கொலஸ்ட்ராலை எதிர்த்து காக்கும் குணத்தையும் கொண்டுள்ளது பூண்டு. பல உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கவும் கூட பூண்டு உதவுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. பூண்டை சிறிதளவு நசுக்கி உங்கள் தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலுள்ள அலிசின் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி சிறப்பாக செயல்பட வைக்கும்.

ஆளி விதை

ஆளி விதையில் ஆல்பா-லினோலெனிக் அமிலம், ஒமேகா-3 கொழுப்பமிலம் மற்றும் லிக்னன் என்றழைக்கப்படும் ஃபைட்டோ-ஈஸ்ட்ரோஜென்கள் ஆகியவைகள் அடங்கியுள்ளது. இவையனைத்தும் நோய் எதிர்ப்பு அமைப்பின் எதிர் செய்கையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் தடுப்பாற்றல் எதிர் செய்கையை கவனிக்கும் அங்கமாக விளங்குவதால், தொற்றுக்கள் மற்றும் இதர நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

மஞ்சள்

மஞ்சளில் வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து போன்ற கனிமங்களும் அடங்கியுள்ளதால், உடலில் பல அமைப்புகள் சரிவர செயல்பட இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதுப்போக, இதில் கர்குமின் என்ற பொருளும் அடங்கியுள்ளது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட் செயல்களை புரிந்து நோய் தடுப்பாற்றல் அமைப்பின் செயலாற்றலை மேம்படுத்தும்.

தயிர்

தயிரில் ப்ரோபையாடிக்ஸ் அடங்கியுள்ளதால், அது செரிமானத்திற்கு சிறந்த உணவாக விளங்குவது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இது நோய் தடுப்பாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தி பல வித பாக்டீரியா மற்றும் வைரல் தொற்றுக்களில் இருந்து உங்கள் உடலை காக்கவும் செய்யும். இன்டெர்ஃபெரோன் உற்பத்தியை ஊக்குவிக்கும் செயலாலேயே மேற்கூறிய செயல் நடப்பதாக நம்பப்படுகிறது. இன்டெர்ஃபெரோன் என்ற பொருள் உங்கள் நோய் தடுப்பாற்றல் அமைப்பை மேம்படுத்தும். தினமும் தயிரை உட்கொண்டால் பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும் என்றும் சில ஆய்வுகள் கூறுகிறது.

பாதாம்

வைட்டமின் ஈ குறைபாடு இருந்தால் தொற்றுக்களை எதிர்த்து போராடும் நோய் தடுப்பாற்றல் அமைப்பின் திறன் பாதிக்கப்படும். அதனால் வைட்டமின் ஈ அதிகமாக உள்ள பாதாம்களை ஒரு கையளவு எடுத்துக் கொண்டு கொறிக்கவும். இதனால் உங்கள் நோய் தடுப்பாற்றல் அமைப்பு சீராக செயல்படும்.

நண்டு, கடல் சிப்பி மற்றும் சிவப்பு இறைச்சி

உலக அளவில் உங்கள் உடல் செயல்பட தேவையான கனிமங்களில் ஜிங்க் ஒன்றாக உள்ளது. இது தொற்றுக்களை எதிர்த்து போராடும் குருதி வெள்ளையணுகளின் காக்கும் வேலையை திறம்பட செய்ய வைக்கும். வெளிப்புற வேண்டா உயிரிகளை அழிக்கும் நோய் தடுப்பாற்றலின் எதிர் விளைவிற்கு வினையூக்கியாகவும் இது செயல்படும். நண்டு, கடல் சிப்பி மற்றும் சிவப்பு இறைச்சி போன்றவைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு போதுமான ஜிங்க் சத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். சைவ உணவை உண்பவர்களுக்கு ஜிங்க் குறைபாட்டு இடர்பாடு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் சத்தூட்டிய உணவு தானியங்கள் போன்றவைகளில் ஜிங்க் உள்ளது. அதனை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பச்சை இலை காய்கறிகள்

கட்டாயப்படுத்தப்பட்ட காரணத்திற்காக பச்சை இலை காய்கறிகளை உட்கொண்டு வருகிறீர்களா? உங்களுக்கு ஓர் நற்செய்தி. இந்த பச்சை இலை காய்கறிகளில் ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ளது. அதனால் நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஃபோலிக் அமில குறைபாடு உள்ளவர்களுக்கு, தொற்றுக்களை எதிர்த்து போரிடும் குணங்களை கொண்ட பிறபொருள் எதிரிகள் குறைந்த அளவில் உற்பத்தியாகும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதுவும் நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது, போதுமான ஃபோலிக் அமிலம் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கிரீன் டீ

கிரீன் டீயில் பாலிஃபீனால்கள் மற்றும் கேட்சின்ஸ் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சளிக்காய்ச்சல் மற்றும் ப்ளு காய்ச்சல் வைரஸை அழிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என்று சில ஆய்வுகள் கூறுகிறது. இருப்பினும் கிரீன் டீ பருகும் போது, பால் சேர்க்க கூடாது. அதற்கு காரணம், பாலில் உள்ள புரதம் கேட்சின்சுடன் இணைந்து ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்களை இழக்க செய்யும். சிறிது எலுமிச்சை அல்லது தேன் சேர்த்துக் கொண்டால் அவ்வகை பாதிப்பு இருக்காது. மேலும் சுவையுடைமையும் கூடும்.2 garlic

கேரட், சிவப்பு பூசணி மற்றும் பப்பாளி

பீட்டா கரோட்டீன் வளமையாக உள்ள இவ்வகை உணவுகள், நோய் எதிர்ப்பு அமைப்பின் பல அங்கங்களை செயலாற்ற வைக்கும். மேலும் உடம்பில் ஏற்பட்டுள்ள தொற்றுக்களை வேகமாக ஆற வைக்கும். இவ்வகை உணவுகளை சாலட், சூப் மற்றும் ஜூஸ் என பல விதமாக உட்கொள்ளலாம்.

 

Related posts

தூதுவளையில் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டிய உணவுகள்!!!

nathan

உடல்சூட்டை குறைக்கும் நாட்டு வைத்தியம்!சூப்பர் டிப்ஸ்….

nathan

40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி? தெரிஞ்சிக்கங்க…

nathan

ஓட்ஸ் பேரீச்சை பர்ஃபி செய்வது எப்படி?

nathan

இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

நொறுக்கு தீனிகள் மீதான நாட்டம் – உணவு பழக்கம்

nathan

இப்படி இருந்தால்தான் அது நல்ல இறைச்சி…

nathan

வியக்க வைக்கும் மருத்துவம்! கடுகு விதைகளை தமிழர்கள் ஏன் உணவில் சேர்த்தார்கள் தெரியுமா?

nathan