குழந்தை பிறந்த உடன் அவர்களுக்கென பெற்றோர்கள் சில விளையாட்டு பொருட்களையும் சேர்த்தே வாங்கி விடுகிறார்கள்.
உறவினர்கள் குழந்தையின் வயதிற்கேற்ற பொம்மைகளையும், சிலர் பாலினத்திற்கேற்ற பொம்மைகளையும் வாங்கி கொடுப்பார்கள். இங்கு குழந்தைகளுக்கு விளையாட கொடுக்க கூடாத பொம்மைகள் பற்றி பார்க்கலாம்.
சீன ப்ளாஸ்டிக் பொம்மைகள், ஃபர், செயற்கை நாரிழை கேசம் கொண்ட பொம்மைகள், பெயின்ட், தரம் குறைந்த கலர் க்ரயான்ஸ், சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள், விலை குறைந்த, தரமற்ற பொம்மைகளில் பாலிவினைல் குளோரைட் உள்ளிட்ட மோசமான இரசாயனங்கள் கலந்திருக்கும். அவற்றை, குழந்தை வாயில் வைத்தால், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுபோக்கு, நுரையீரல் பாதிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படலாம்.
கூர்மையான முனைகள் கொண்ட பொம்மை, சிறு பொம்மைகள், சின்னச்சின்ன பாகங்கள் கொண்ட விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். குழந்தைகள் நீங்கள் கவனிக்காத நேரத்தில் அவற்றை விழுங்கி விடலாம். இது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.