அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை தற்போது உறுதியாக கூறலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்மை குறைவுக்கும் காரணமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது.
ஹார்வேர்டு பல்கலைக்கழகம் சார்பில் 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், காய்கறிகள், பழங்கள் நிறைந்த சைவ உணவு பழக்கம் உடையவர்கள் மற்றும் சிக்கன், மீன் உணவுகளை உண்பவர்களுக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பவர்களை விட விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கை வியன்னால் இந்த வாரம் நடைபெறவுள்ள மனித இனப்பெருக்கம் குறித்த ஐரோப்பிய மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பில், நாம் உண்ணும் உணவு முறை முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்:
பதப்படுத்தப்பட்ட இறைச்சி:
மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பதப்பட்டுத்தப்பட்ட இறைச்சி வகைகளால், விந்து அணு எண்ணிக்கை குறைவதாக ஹார்வேர்டு ஆய்வு தெரிவித்துள்ளது.
கார்பனேட்டட் பானங்கள்:
கார்பனேட்டட் பானங்கள் பானங்களை அதிக அளவு குடிப்பதினால், விந்து அணுக்களின் செயல் திறன் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்:
பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களளை அதிக அளவு எடுத்துக்கொள்வதால் விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. பால் பொருட்கள் சில அத்தியாவசிய சத்துக்ளான கால்சியம், விட்டமின் டி உள்ளிடவை அடங்கியதாக இருந்தாலும், விந்து அணுக்களை பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
சோயா உணவு வகைகள்:
பாஸ்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் சோயா பொருட்களை அதிக அளவு பயன்படுத்துபவர்களில் 99 சதவிகிதம் பேருக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.