மருத்துவ குறிப்பு

கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் தெரியுமா?

ஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .
குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கிவிட்டது இனி பகல் நேரம் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வை மூலம் அதிகமாக வெளியேறும் இதனால் உடலில் வறட்சி அடைந்த சருமம் பொலிவிழந்து காணப்படும். எப்பொழுது பார்த்தாலும் ஒரே தாகமாக இருக்கும் இது போன்ற பிரச்சனைகளைப் போக்கும் ஒரு அருமையான பழம் என்றால் அது தர்ப்பூசணி தான் இது தாகத்தை மட்டும் போக்கக் கூடியது அல்ல. இதில் பல மருத்துவ நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. முக்கியமாக இதை தினமும் ஒரு துண்டாவது சாப்பிட்டால் உடலுக்கு அத்தனை நன்மைகள் கிடைக்கின்றன.

2408847918e9001ca0a42bc856a862736b10293624421380518100933751

இதில் அப்படி என்ன நன்மைகள் என்று தெரிந்துகொள்ள இந்த பதிவை இறுதி வரை படித்து பாருங்கள்.

தர்பூசணியில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கார்போஹைட்ரேட் ஆகியவை உள்ளது. உடல் நலத்திற்கு அதிக ஊட்டச்சத்து வழங்க கூடிய பழவகைகளில் தர்பூசணியும் ஒன்று. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரிகள் 7 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இது கோடை காலத்தில் ஏற்படும் உடல் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல் இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு பசலைக் கீரைக்கு சமமானதாகும்.

அடுத்து தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதுடன் கலோரிகள் குறைவாக இருக்கிறது. இதனால் உடல் வறட்சி நீங்குவது உடல் எடை குறைவது மட்டுமின்றி வேறு நன்மைகளும் நிறைந்துள்ளன. பொதுவாக கோடைக் காலங்களில் உடலில் உள்ள நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் இரத்தத்தில் நீர்ச்சத்து குறைந்து இரத்த ஓட்ட வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் தர்பூசணி பழங்களை சாப்பிடுவதால் இரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து இரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி தருகிறது.

மேலும் நீர் சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்ற தோடு நீர்த்தாரையில் ஏற்படும் அடைப்பு நீர் குத்தல் போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை நீக்க உதவுகிறது.

அடுத்து இதில் 11 சதவீதம் விட்டமின் ஏ 13% விட்டமின் சி இருக்கிறது. இந்த விட்டமின் சத்து மாரடைப்பைத் தடுக்க உதவுகிறது. தர்பூசணியில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். இதய துடிப்பை சீராக்கும். மேலும் இதில் லைகோபின் சிற்றுளியால் சக்திகள் மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக செயல்படுகின்றன. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால் இது இதயத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அடுத்து பெண்களைப் பொறுத்தவரையில் கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இரத்த அழுத்த பாதிப்பு எடை குறைக்க உதவுகிறது.

அடுத்ததாக வயிற்றில் நீர்ச்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.

அடுத்து வெயில் காலத்தில் அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை செய்ய முக்கியமானது சருமப் பிரச்சனை தர்பூசணியில் இருக்கும் விட்டமின் சி பீட்டா-கரோட்டின் ஆகிய இரண்டும் செயல்பட்டு சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் இதில் உள்ள க்ளுடாதியோன் சருமத்தில் வெடிப்பு சரும வறட்சி சருமத்தில் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும். மேலும் முடியும் நன்றாக வளர்வதற்கு இது உதவுகிறது.

இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருவது ஆண்மையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button