156345
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கெமிக்கல் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தை காக்கும் கருப்பட்டி

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை நீரில் விட்டமின்களும், கனிமச் சத்துகளும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த பனை நீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி.

கருப்பட்டி கெமிக்கல்கள் ஏதும் சேர்க்காமல் இயற்கையாக வெறும் பனை நீரைக் காய்ச்சி தயாரிக்கப்படுவதால் அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். காபி, டீயில் கருப்பட்டியை சேர்த்துக் கொள்வதனால், மூக்கடைப்பில் இருந்து விடுதலை அளிப்பதோடு, தொண்டை புண்ணையும் சரிசெய்யும்.

கருப்பட்டியில் உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்குத் தேவையான கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை ஒருவர் குடிக்கும் காபி அல்லது டீயில் சேர்த்துக் குடிப்பதால், கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

உணவு உட்கொண்ட பின் கருப்பட்டியை சிறிது உட்கொண்டால், அது செரிமான உறுப்புக்களைத் தூண்டி, எளிதில் செரிமானம் நடைபெறச் செய்யும்.

கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் சீராக்கி, இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கும்.

கருப்பட்டியை ஒருவர் தொடர்ச்சியாக எடுத்து வந்தால், அது கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும். மேலும் கருப்பட்டி கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.

Related posts

இதோ மாதவிடாய் காலத்தில் கட்டாயம் செய்யக்கூடாத செயல்கள்! இத படிங்க!

nathan

வாடகைத் தாயைப் பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்!!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு இதுபோன்ற வயிற்று வலி இருந்தால், நீங்கள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் !

nathan

மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் தண்ணீர்

nathan

உடற்சூடு, பித்தம் போன்றவற்றை தணிக்கும் துளசி குடிநீர்

nathan

இதயத்தைக் பாதுகாக்க அற்புதமான வழிமுறைகள்…

nathan

கட்டாயம் இதை படியுங்கள்..குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத மருந்துகள்

nathan

ஆரோக்கியமான இதயத்துடன் வாழ

nathan

வளர்ச்சிக்குத் தடையா?

nathan