27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.500.560.350.160.30
மருத்துவ குறிப்பு

இதோ எளிய நிவாரணம்! சிறுநீரக தொற்று பாதிப்பா? இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக, சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீர் பையில் தேங்கும் நீர், பிறப்புறுப்புகளில் உண்டாகும் தொற்று போன்ற காரணங்களால், சிறுநீர் தொற்று ஏற்படுகிறது.

இது பெண்களுக்கு தொடர் பிரசவம், மாதவிடாய் காலத்திற்கு பின், சிறுநீர் பாதையில் ஏற்படும் சுருக்கம் ஆகியவற்றால் இப்பிரச்னை உண்டாகிறது எனப்படுகின்றது.

சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, சீராக சிறுநீர் வெளியேறாதது, அடி வயிறு வலிப்பது, காய்ச்சல் போன்றவை, இதன் அறிகுறிகள் ஆகும்.

சிறுநீர் தொற்று பெரும்பாலும், பாக்டீரியா வகை தாக்கத்தால் தான் ஏற்படுகிறது.

சிறுநீர் பரிசோதனை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் ஆகியவற்றில், “அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்‘ பரிசோதனை ஆகியவை செய்ய வேண்டும்.

பிறப்புறுப்புகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது, தினமும் குறைந்தபட்சம், 2.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றால், சிறுநீரக தொற்று வராமல் தடுக்கலாம்.

நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம், பார்க்கின்சன்ஸ் போன்ற நரம்பியல் நோய்களுக்கு ஆளானவர்களுக்கு, சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இருப்பினும் சிலருக்கு அவசரமாக சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கசிவு, போன்றவை சிறுநீர் தொற்று காரணமாக ஏற்படுகின்றது. இது எதனால் ஏற்படுகின்றது? இதற்கு என்ன தீர்வு என்ன என்பதை பார்ப்போம்.

அவசரமாக சிறுநீர் கழிக்கும் பிரச்னை எதனால் வருகிறது?

அவசரமாக சிறுநீர் கழிப்பது (Urge leak), அழுத்தம் காரணமாக ஏற்படும் சிறுநீர் கசிவு (Stress leak) என, இருவகைகள் உள்ளன.

சிறுநீர்ப்பை சதைகளின் இயக்கத்திற்கு பயன்படும், “அசிட்டைல் கோலின்‘ எனும் வேதிப்பொருள், அளவிற்கு அதிகமாக சுரப்பதால், சிறுநீர்ப்பையின் செயல்திறன், வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து, அவசரமாக சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஏற்படுகிறது.

கழிப்பறை செல்வதற்குள் சிறுநீர் வெளியேறுதல், அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுதல், படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் நிலை, இரவில் அதிகளவு சிறுநீர் கழித்தல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

இதற்கு என்ன பரிசோதனை செய்யலாம்?

யுரோ டைனமிக்ஸ்‘ பரிசோதனை மூலம், சிறுநீர்ப்பையின் அழுத்தத்தை கண்டறிவது உள்ளிட்ட, சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளை பரிசோதித்து, உரிய மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீர் கசிவு உண்டாக காரணம்?

சிறுநீரக குழாயின் பக்கவாட்டு தசைகள் பலவீனம் அடைவதால், அழுத்தம் காரணமான சிறுநீர் கசிவு உண்டாகிறது. பெரும்பாலும், பெண்கள் தான் இப்பிரச்னைக்கு ஆளாகின்றனர்.

இதனால், இருமல், தும்மல் உண்டாகும்போதும், தூக்கத்தின்போது, படுக்கையில் திரும்பி படுக்கும்போதும், குனிந்து, நிமிர்ந்து வீட்டு வேலைகளை செய்யும்போதும், சிறுநீர் வெளியேறுகின்றது.

இதற்கு தீர்வு என்ன?

இப்பிரச்னைக்கு ஆளாவோரின், பலவீனம் அடைந்த, சிறுநீரக குழாயின் பக்கவாட்டு தசைகளை, “பிசியோதெரபி‘ பயிற்சியால் வலுவடைய செய்தல், தேவையின் அடிப்படையில், அவர்களுக்கு, சிறு அறுவை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால், அழுத்தம் காரணமான சிறுநீர் கசிவுக்கு தீர்வு காணலாம்.

Related posts

கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

nathan

grade 1 diastolic dysfunction – தரம் 1 டயஸ்டாலிக் செயலிழப்பு

nathan

கர்ப்ப பரிசோதனையை நீங்க இரவில் பண்ணலாமா? அல்லது காலையில் பண்ணலாமா?

nathan

தீர்மானங்கள்… சில விஷயங்கள்

nathan

திருமணத்திற்கு பிறகு பெண்கள் அதிகமாக செய்யும் தவறுகள்

nathan

ரத்தசோகையைப் போக்க…!

nathan

பருவ பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும் இரத்த சோகை

nathan

அவசியம் படிக்க.. கண்களை பாதுகாப்போம்

nathan

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எப்படி தடுக்கலாம்?

nathan