23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1485500961 6946
எடை குறைய

எடையை குறைக்க விரும்பும் லேடீஸ் இத படிங்க


உடல் பருமன் உள்ள பெண்களின் எண்ணிக்கை, தற்போது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெண்களுக்கு திருமணத்துக்கு பிறகும், பிரசவத்துக்குப் பிறகும் உடல் எடை அதிகரித்து விடுகிறது. இதற்கு, போதிய உடல் உழைப்பும், உணவு கட்டுப்பாடும் இல்லாததே காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால், உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றால், ஐந்து வகை உணவை பெண்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.கீரை :உணவில் கீரை வகைகள் இல்லாமல், முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் போலிக் அமிலம் உள்ளன. இவை கண் பார்வைக்கும் மிக நல்லது. அத்துடன் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய நான்கு அத்தியாவசிய சத்துக்களும் இதில் உள்ளன.

 

முழு தானியங்கள்:

முழு தானியங்களில், 96 விழுக்காடு வரை நார்ச்சத்து உள்ளவை. இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதால் அச்சமின்றி உண்ணலாம்.

கொட்டை பருப்புகள்:

பாதாம், முந்திரி போன்ற கொட்டை பருப்புகள், உணவு பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டும். மெக்னீசியம், பி மற்றும் இ வைட்டமின் சத்துக்களை கொண்ட இந்த பருப்புகளை, காலை சிற்றுண்டியிலோ, சாலட்டிலோ அல்லது தயிரில் தூவியோ உண்ணலாம். இருதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக, போராடும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.

இவற்றில் கொழுப்பு கலோரிகளும் உண்டு. இந்த கொழுப்பு இருதயத்திற்கு நன்மை செய்யும், நல்ல கொழுப்பு ஆகும். மாலை சிற்றுண்டியாக கூட இதனை சாப்பிடலாம். அதிக அளவில் சாப்பிட்டு விடக்கூடாது. ஒரு வாரத்தில், 15 முதல் 20 பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்பு ஒருவருக்கு போதுமானது.

தயிர்:

குறைந்த கொழுப்புடைய அல்லது கொழுப்பற்ற தயிரில் வைட்டமின்கள், புரதம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது. உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாவும், தயிரில் உள்ளது. வாரம் ஒன்றுக்கு மூன்று முதல், நான்கு கோப்பை தயிர் ஒருவருக்கு போதுமானது. ஆனால் அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக வெறும் தயிரில், சிறு பழங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

நாவல் பழம்:

பெரும்பாலான நார்ச்சத்து உணவு தயாரிப்புகளில், நாவல்பழம் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அதற்கு காரணம், அதில் அதிக அளவு நார்ச்சத்து இடம் பெற்றிருப்பதுதான். ஆன்டி ஆக்சிடன்டுகளும் இதில் அதிகமாக உள்ளன. இவை உடல் எடையை குறைக்க உதவுவதோடு, ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுக்கிறது. ஒரு கிண்ணம் நிறைய, வாரம் மூன்றுமுறை ஒருவர் இதனை உட்கொண்டால் போதுமானது.

1485500961 6946

Related posts

டை இழப்பதற்கான‌ டாப் 5 காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ்

nathan

உடல் எடை குறைக்க விரும்புவோருக்கான மாற்று உணவுகள்!!!

nathan

உடல் எடையை குறைக்கும் முட்டைகோஸ்

nathan

உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி

nathan

நீங்கள் கட்டாயம் நம்பக்கூடாத சில உடல் எடை குறைப்பு டிப்ஸ்…

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் பருமனால் மனக்கவலையா? இந்த சின்ன மாற்றத்தை செய்யுங்க போதும்…

nathan

தினமும்‬ இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!

nathan

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

sangika

தினம் இதை சாப்பிடுங்கள் எடை கண்டிப்பா குறையுமாம்!!சூப்பர் டிப்ஸ்…

nathan