மருத்துவ குறிப்பு

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! இந்த 5 அறிகுறிகளும் உங்களுக்கு இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

பெரும்பான்மையான புரதங்கள், நொதியங்கள் போன்றவற்றிற்கு இரும்பு ஒரு இன்றியமையாத மூலப்பொருள் ஆகும்.

ஆக்சிசனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உடலில் எடுத்து செல்லும் ஈமோகுளோபின் , மயோகுளோபின் என்பவற்றின் உள்ளடக்கமாக இரும்பு உள்ளது.

உடலில் 2/3 பகுதி இரும்பு ஈமோகுளோபின் ஆக இரத்தச் சிவப்பணுக்களில் இருக்கிறது. இவை ஆக்சிசனை திசுக்களுக்கு எடுத்து செல்லும்.

உயிரணுக்களின் பெருக்கம், வளர்ச்சி போன்றவற்றிற்கு இரும்பு முக்கியமான மூலப்பொருள்.

இரும்புச்சத்து குறைவால் போதிய ஆக்சிசன் இல்லாமல் தளர்ச்சியும், வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் குறைபாடும் ஏற்படும்.

இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட இதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை அறிந்து கொண்டாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.625.500.560

  • உடல் ஆற்றல் குறைந்து எப்போதும் சோர்வாகவும், சோம்பேறியாகவும் இருக்கும். எந்தவேலையையும் செய்யத் தோன்றாமல் சோர்வுடனே இருப்பீர்கள். நீங்கள் செய்ய வேண்டும் என்று முற்பட்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது. இப்படியான அறிகுறிகள் இரும்புச் சத்துக் குறைபாட்டிற்கு முக்கிய காரணிகளாகும்.
  • உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் இருக்கிறது அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்றாலும் இரும்புச் சத்துக் குறைபாடேக் காரணம். இப்படி வாயின் உள்பக்கம் இரத்த ஓட்டம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருத்தல், உதடு, விரல் நகங்கள் நன்கு வெள்ளை நிறத்தில் மாறுகிறதெனில் இரும்புச் சத்துக் குறைபாடே காரணம்.
  • இதுவரை இல்லாதது போல் படிகட்டு ஏறினால் மூச்சு வாங்குதல், நடந்தால் மூச்சு வாங்குதல் என கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வேலை செய்தாலும் மூச்சு வாங்குதல் இருந்தாலும் அதுவும் இரும்புச் சத்துக் குறைபாடின் அறிகுறிதான்.
  • வழக்கத்திற்கு மாறாக திடீரென இதயத் துடிப்பு வேகமாகிறது என்றால் அதற்கு இரும்புச் சத்துக் குறைபாடுதான் காரணம். ஏனெனில் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இதயம் ஆக்ஸிஜனை வெளியிட கூடுதலாக வேலை செய்யும்.
  • ஒரு இடத்தில் நிலயாக அமர்ந்திருத்தால் உடனே கால் மரத்து போகும். கால்கள் ஷாக் அடித்ததைப் போல் உணர்வீர்கள். இப்படி அடிக்கடி உணர்கிறீர்கள் என்றால் இரும்புச் சத்து போதுமான அளவு இல்லை என்பதே காரணம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button