தேவையான பொருட்கள் :
அரிசி – 1 கப்,
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை – கால் கப்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
தாளிக்க:
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை :
• அரிசியை உதிரியாக சாதமாக வடித்து 1/2 டீஸ்பூன் நெய் கலந்து வைக்கவும்.
• வெறும் கடாயில் மிளகு, ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு இரண்டையும் வறுத்து பொடித்து வைக்கவும்.
• கடாயில் நெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சாதத்தில் கொட்டி, பொடித்த மிளகு, உளுந்து பொடியை சேர்த்து வறுத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்து ஒரு புரட்டு புரட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.