29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
6 157103
ஆரோக்கியம் குறிப்புகள்

பத்திரமா இருந்துக்கோங்க…! இந்த கனவு வருவது உங்களுக்கு வரப்போற ஆபத்துக்கான எச்சரிக்கை மணியாகும்…

கனவு என்பது அனைவருக்குமே பிடித்த ஒன்றாகும், ஏனெனில் நம்முடைய நிஜ வாழ்க்கையில் நடக்காத பல விஷயங்கள் கனவில் நடக்கும், நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள் கனவில் நடந்து அதனை காலையில் நினைத்து பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியானது அலாதியானது. ஆனால் கனவு சிலசமயம் நமக்கு விரும்பத்தகாத பல அனுபவங்களையும் ஏற்படுத்தும்.

கனவு சிலசமயம் நமக்கு பயத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும். நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி கனவிலும் நம்மை பயமுறுத்தும் ஒரு விஷயமென்றால் அது பேய்தான். நமது கனவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது, அந்த வகையில் நம் கனவில் பேய்கள் வருவதற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. இந்த பதிவில் பேய் உங்கள் கனவில் வருவதன் அர்த்தங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

பேய்க்கனவு வருவதன் பொதுவான அர்த்தம் உங்களுக்கு பேய்க்கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் கடினமான நேரத்தை எதிர்கொள்ள போகிறார்கள் என்று அர்த்தம். இந்த கனவு பொதுவாக எதிர்மறையானதாக கருதப்படுகிறது, பெரிய வேலையை தொடங்கும் முன்னரோ அல்லது பெரிய மனஅழுத்தத்தில் இருக்கும்போதோ பேய்க்கனவு ஏற்படும். இது உங்களின் மரணபயத்தையும், உங்களுகுகள் இருக்கும் குற்ற உணர்ச்சியையும் குறிப்பதாக இருக்கும்.

பேயாக மாறுவது போல கனவு வந்தால் இது மிகவும் விசித்திரமான ஒரு கனவாகும், எண்ணெயில் பொதுவாக நாம் நம்மை கனவில் பார்ப்பது என்பது அரிதான ஒன்றாகும். நீங்களே பேயாக மாறுவது போல கனவு வந்தால் உங்களின் ஆசைகள் உங்களை விட்டு விலகப்போகிறது என்று அர்த்தம். தற்போது வாழும் வாழ்க்கையிலிருந்து தப்பித்து புது வாழ்க்கையை தொடங்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றும்.

பேயைத் தொடுவது போல கனவு வந்தால் பேய்களைத் தொடுவது என்பதோ அல்லது அவற்றை உணர்வது என்பதோ முடியாத காரியம் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் அதையும் மீறி பேயைத் தொடுவது போல உங்களுக்கு கனவு வந்தால் நீங்கள் கடுமையான சவாலை எதிர்கொள்ள தயாராகப் போகிறீர்கள் என்று அர்த்தம். இது உங்கள் தைரியத்தையும், எதையும் சமாளிக்க தயாராக இருக்கும் உங்களின் துணிவையும் உணர்த்தும்.6 157103

குடும்ப உறுப்பினர்களை பேயாக பார்த்தால் உங்களுக்கு தெரிந்தவரையோ அல்லது உங்கள் உறவினர்களையோ கனவில் பேய் வடிவத்தில் பார்த்தால் அவர்கள் உங்களுக்கு எதிராக தீய திட்டத்துடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இவர்கள் உங்களை உணர்ச்சிரீதோயாகவோ அல்லது உடல்ரீதியாகவோ காயப்படுத்த போகிறார்கள் என்பதன் அர்த்தம்தான் இது. இந்த கனவு உங்களுக்கான எச்சரிக்கை மணி ஆகும், இவர்களிடம் பார்த்து பழக வேண்டும்.

இறந்த குடும்ப உறுப்பினர் பேயாக கனவில் வந்தால் இறந்த குடும்ப உறுப்பினர் உங்கள் கனவில் பேயாக வந்தால் அவர்களுக்கு நீங்கள் செய்ததற்காகவோ அல்லது அவர்களிடம் பேசிய வார்த்தைகளுக்காகவோ நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று அர்த்தம். உங்களின் உறவு உங்கள் செயல்களால்தான் உருக்குலைந்தது என்று நீங்கள் கவலைப்படுவதன் அர்த்தம் இது.

பேய் உங்களைத் தாக்குவதை போல கனவு வந்தால் இந்த கனவு வந்தால் நீங்கள் உங்களின் எதிரிகளையும், ஆபத்துக்களையும் சந்திக்க தயாராக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது உங்களின் கடந்த காலத்துடன் தொடர்புடையதாகவோ அல்லது உங்களை மோசமாகவோ உணரச்செய்த நிகழ்வாகவோ இருக்கலாம். இது நீங்கள் அவற்றை எதிர்த்து போராட தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

வெள்ளை பேய் கனவு வந்தால் இந்த கனவு வருவது உங்களுக்கு விரைவில் நல்ல காரியம் நடக்கப் போகிறது என்று அர்த்தம். வெள்ளை பேய் கனவில் வருவது உங்களுக்கு நல்ல செய்தி வரப் போவதன் அறிகுறி ஆகும். உங்கள் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல தயாராகிக் கொள்ளுங்கள்.

பேய் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் பேய் உங்களுடன் பேசுவது போல கனவு வந்தாலோ அல்லது உங்களிடம் ஏதாவது சொல்ல முயற்சித்தாலோ உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களை குழியில் தள்ள முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது.

 

Related posts

நெற்றியில் நாமம் இடுவதற்காக பயன்படுத்தும் நாமக்கட்டி… நாமக்கட்டியின் நன்மைகள்..

nathan

பெண்களுக்கு மாதவிடாய் நார்மலாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி

nathan

இந்த 2 பொருளை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

nathan

இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க! முதுகில் குத்தும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

nathan

நேத்து அடிச்ச சரக்கோட போதை இன்னும் குறையலையா? அப்ப இதெல்லா சாப்பிடுங்க!!!

nathan

உஷாரா இருங்க…!இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்லதா?

nathan

தூக்கம் நன்றாக வர தயிரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

‘செக்’ பண்ணி பாருங்க! உங்கள் ‘பிளட்’ குரூப்பை வைத்து…. நீங்கள் எப்படிப்பட்டவர்? ‘என்பதை’ கணிக்கலாம்…

nathan