பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும்.
வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது.
குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது.
இதனை தடுக்க மருந்தகளை விட இயற்கை வைத்தியமே சிறந்தது ஆகும். தற்போது அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
- பொரித்த படிகாரம், மாசிக்காய், வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சீழ்வெள்ளை, ரத்த வெள்ளை குணமாகும்.
- இளநீரில் ஒரு ஸ்பூன் சந்தனத்தூளை ஊற வைத்து, அந்த நீரை வடித்துப் பருகி வரலாம்.
- திப்பிலி 5 பங்கு, தேற்றான் விதை 3 பங்கு கலந்து நன்றாய்ப் பொடித்து, அதில் 4 கிராம் எடுத்துக் கழுநீரில் 3 நாட்கள் சேர்த்து உண்ணலாம்.
- ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் இலை இவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து அருந்தலாம்.
- பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, நற்சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம்.
- சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
- கட்டுக் கொடி மூலிகையை நன்கு அரைத்து எருமை தயிரில் கரைத்து சாப்பிட வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நோய் தீர்ந்து விடும்.
- வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.
- அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.
- வெள்ளைப்படுதலால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த இலுப்பை புண்ணாக்குடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து தூளாக்கி எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்து வெந்நீரால் கழுவ வேண்டும்.
- தென்னம்பூ இரண்டு பிடி, உதிர மரப்பட்டை சிறுதுண்டு இவை இரண்டையும் நன்கு இடித்து பாத்திரத்தில் வைத்து மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக வற்றியவுடன் ஆற வைத்து வடிகட்டி குடித்தால் சுமார் 25 நாட்களுக்குள் வெள்ளைப்படுதல் குணமாகும்.
- அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகலாம்.
- பொடுதலை இலையுடன், சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
- கைப்பிடி அளவு வெள்ளறுகுடன் 5 மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம்.
- இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.
- ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.