25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே இறுக்கான உடை அணிவதை தவிருங்கள்

பெண்களே இறுக்கான உடை அணிவதை தவிருங்கள்
இன்றைய இளம் பெண்கள் பேஷன் என்று நினைத்து உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன.பெண்கள் நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம் என்று கருதுகின்றனர். ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உடலுக்கு நல்லதல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும்.இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும். உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும்.

தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம். ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். ஈரத்தை நன்கு உள்வாங்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.

Related posts

மல்லிகைப் பூ அழகிற்காக மட்டுமல்ல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது!

nathan

உங்களுக்கு தெரியுமா விக்கல் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வது எப்படி

nathan

நாம் அனைவரும் இக்கணமே தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள்..!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களே இந்த வகை ஆண்கள் காதலில் எளிதில் ஏமாற்றிவிடுவார்கள்…?

nathan

தெரிஞ்சிக்கங்க… உடலில் நீர்ச்சத்து குறைந்தால்…?

nathan

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாப்பது எப்படி?

nathan

உங்களுக்குதான் முகத்திற்கு பொலிவை தரும் மூக்குத்தியை வலது புறம் குத்த கூடாதா.?!

nathan

உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் நீங்கள் ரொம்ப அதிஷ்டசாலி! தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆடை வடிவமைப்பு தொழிலில் அதிக லாபம்

nathan