23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
4 1014
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கொசுக்களை இயற்கை முறையில் விரட்ட 5 வழி முறைகள்

பனிகாலத்தில் கொசுக்கள் தொல்லை அதிகரிப்பது சாதாரணமாகிவிட்டது. அந்தநோரத்தில் நாம் என்னதான் ஆடைகள் முழுவதும் அணிந்திருந்தாலும் அதையும் தாண்டி கொசுக்கள் கடிக்கத்தான் செய்யும். அவ்வாறு கொசுகள் கடிப்பதை தடுக்க வீட்டினுள் கொசுக்கள் நுழையாமல் இருக்க வேண்டும். அதற்கான 5வழிமுறைகளை பார்க்கலாம்.

1. எலுமிச்சைப் பழத்தைப் பாதியாக நறுக்கி, அதில் கிராம்பை நட்டு வைக்கவும். இதன் வாசனை அவற்றை நெருங்கவிடாமல் செய்யும்.

2. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில துளிகள் லாவண்டர் எண்ணெயுடன் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். இதனால், கொசுக்கள் பக்கத்தில் வராது; சுகந்தமான வாசனையும் கிடைக்கும்.

3. வேப்ப எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். வேப்ப எண்ணெய், யூக்கலிப்டஸ் ஆயில், கிராம்பு எண்ணெய் மூன்றையும் கலந்து வீடு முழுக்கத் தெளிக்கவும். கொசுக்கள் வாசல் தாண்டி உள்ளே வராது.

4. வேப்ப இலை, நொச்சி, ஆடுதொடா, குப்பைமேனி போன்ற இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சி தைலமாக்கவும். இந்த தைலத்தைத் தேய்த்துக்கொண்டால், கொசுக்கள் நம்மை நெருங்காது.

5. கற்பூரவல்லி, கற்றாழைச் சாறு இரண்டையும் தண்ணீருடன் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் ஓடிப்போகும்.4 1014

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கருப்பைக் கோளாறுகளை சரிசெய்யும் அசோக மரப்பட்டை

nathan

உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வரவேண்டுமா ? இதோ சில யோசனைகள்!

nathan

தாய்ப்பால் சுரக்கலையா? தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா?இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

மகளிர் மேம்பாட்டின் முக்கியத்துவம்

nathan

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொய்யாப்பழம்

nathan

அலர்ஜியின் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்

nathan

மஞ்சள் பற்களை எப்படி பளீர் பற்களாக மாற்றுவது?

nathan

ஏன் தெரியுமா மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது?

nathan

மனிதனுக்கு செலவில்லா எளிய மருந்து சிரிப்பு

nathan