29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
lpills
மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! பிற ப்பு கட் டுப்பாட்டிற்குப் பின்னர் கரு த்தரிக்கும் வழிமுறைகள்!!!

பிற ப்பு கட் டுப்பாட்டிற்குப் பின்னர் சிலர் மாத் திரைகள் மற்றும் மருந்துகளை சாப்பிடுவதை நிறுத்தியவுடன் எளிதில் கர்ப்பம் தரிப்பார்கள். வேறு சிலருக்கு மீண்டும் கர்ப்பம் தரிப்பதற்கு சற்றே அதிக முயற்சிகள் தேவைப்படும்.

சில பெண்கள் சரியான நேரத்தில் மட்டுமே பிரசவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல ஆண்டுகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து வந்திருப்பார்கள். அவர்கள் மீண்டும் கர்ப்பம் தரிக்கலாம் என்று நினைக்கும் நேரங்களில் கர்ப்பத்திற்காக அவர்களால் பொறுத்திருக்க முடிவதில்லை.

பிறப்பு கட்டுப்பாட்டு வழிமுறைகளை நிறுத்திய உடனேயே உங்களால் கர்ப்பம் தரிக்க முடியும். எனினும், சாதாரணமாக ஒரு முறை மாதவிடாய் வரும் வரையிலும் பொறுத்திருந்து, கர்ப்பம் தரிக்கலாம் என்று சில மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாட்டுக்கு மாற்று வழிமுறைகளை பரிந்துரைக்கவும் செய்கிறார்கள்.

ஆனால், சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் இந்த கூற்றுக்கு எதிராகவே உள்ளன.

எவ்வளவு காலம் ஆகும்?

பொதுவாகவே, நீங்கள் பிறப்பு கட்டுப்பாடு செய்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் கருப்பையிலிருந்து முட்டைகள் வெளியேறத் தொடங்கும். எனினும், சில பெண்களிடம் இந்த செயல்பாடு வேகமாகவும், வேறு சிலருக்கு சற்றே அதிக நாட்களை எடுத்துக் கொள்வதாகவும் இருக்கும். நீங்கள் பிறப்பு கட்டுப்பாடு செய்து கொள்ளும் முன்னர் எவ்வளவு சரியாக உங்களுடைய கருமுட்டைகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன என்பதைப் பொறுத்தே, குடும்ப கட்டுப்பாட்டுக்குப் பின்னர் எவ்வளவு காலத்தில் கருமுட்டை வெளிப்படத் தொடங்கும் என்பதை நிர்ணயிக்கும் காரணியாகும். உங்களுக்கு மிகவும் சரியான கால இடைவெளிகளில் கருமுட்டை வெளிப்பட்டுக் கொண்டிருந்தது என்றால், சரியான கால இடைவெளிகளில் கருமுட்டை வெளிப்படாதவர்களை விட வெகு விரைவிலேயே கருமுட்டைகள் வெளிப்படத் துவங்கி விடும். சாதாரணமாகவே கருத்தரிக்க சில மாதங்கள் ஆகும், அது 6 மாதம் என்று சொன்னாலும் மறுப்பதற்கில்லை. பிறப்பு கட்டுப்பாடு முறைகளை நிறுத்தி 6 மாதங்களாகியும் நீங்கள் கருத்தரிக்கவில்லை என்றால் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

உடல் நலம் சார்ந்த பிறப்பு கட்டுப்பாட்டு வழிமுறைகள் சில பெண்கள் கருத்தரிப்பதை தவிர்ப்பதற்காக பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றாமல், உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்காக பின்பற்றி வருவார்கள். எனவே, கருத்தரிக்கும் நோக்கத்துடன் பிறப்பு கட்டுப்பாடு செய்ய நினைப்பவர்கள், மருத்துவரிடம் சென்று உடல் நலத்தைப் பற்றியும் ஆலோசனைகளைப் பெற்று செயல்பட வேண்டியது அவசியமாகும்.lpills

நான் ஏன் கருத்தரிக்கவில்லை? ஒரு மில்லி செகண்டில் உயிரணுவிலிருந்து கருமுட்டையில் நிலை கொள்ளும் பொருட்டாக, நூற்றுக்கணக்கான துல்லியமான செயல்பாடுகளை உடல் செய்கிறது. இந்த சிக்கலான செயல்பாட்டின் போது, சில உயிரணுக்கள் தாமாகவே அழிந்து போகவும், பலமான உயிரணு கருப்பையில் உயிராக உருவாக பதிக்கப்படவும் செய்வது ஒரு இயற்கையான நிகழ்வாகும். பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பெண்கள் கர்ப்பமடைவதை தடுக்கும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை மற்றும் எந்த விதமான வகையில் கர்ப்பம் தள்ளிப் போனாலும் அது கருத்தரிப்பதில் நடக்கும் சாதாரணமான இடைவெளியாகவே இருக்கும்.

கருத்தரிக்காமல் உடல் ரீதியாக இணைந்திருக்க விரும்பும் சமூகத்தினருக்கு மிகவும் பெரிய வரப்பிரசாதமாகவே பிறப்பு கட்டுப்பாடு வழிமுறைகளாகும். கருத்தரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பிறப்பை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கைவிடும் பெண்கள், அடுத்த 40 வாரங்களுக்குள் தங்கள் கையில் ஒரு குழந்தை கிடைக்கும் வகையில் தாங்கள் கருத்தரித்துவிடுவோம் என்று நினைக்கிறார்கள். உண்மையில், பெரும்பாலான பெண்களுக்கு அவர்களுடைய உடல் கருத்தரிக்க ஏற்ற வகையில் தயார்படுத்திக் கொள்ள சில காலம் தேவைப்படும். உடல் தயாரான பின்னர் தான் கர்ப்பம் உருவாகும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… தைராய்டு ஏற்படுவதற்கான முழு அறிகுறிகளும்.. பாதிப்புகளும் என்னென்ன தெரியுமா?

nathan

பூப்பெய்தல் அடைவதற்கு முன் குழந்தைகள் சந்திக்கும் அறிகுறிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கிரைப் வாட்டருக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சா குழந்தைக்கு கொடுக்கவே மாட்டீங்க..

nathan

பேச்சுலர்களே! உங்கள் வீடுகளை அழகாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

nathan

மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan

வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி!

nathan

உங்களுக்கு தெரியுமா தைராய்டினால் ஏற்படும் எடை அதிகரிப்பை குறைக்க எளிய வழிமுறைகள்!

nathan

சரும நோய்களை குணப்படுத்த உதவும் சிறுநீர் சிகிச்சை – புதிய மருத்துவம்!!!

nathan

இதை படியுங்கள்! ஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்: வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ

nathan