ddhdh
அழகு குறிப்புகள்

இயற்கை வழிமுறை.. கருப்பான கால் முட்டியின் நிறம் விரைவில் மாறி பளிச்சிட

வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை.

அதனால்தான் முட்டியில் இறந்த செல்கள் அழுக்குகள் தேங்கி சொரசொரப்பாகவும் கருப்பாகவும் மாற்றுகின்றன.அவ்வாறான கருப்படைந்த முட்டிகளை சாதாரண நிறத்திற்கு கொண்டுவருவது எளிதல்ல. ஆனால் வாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயனபடுத்திப் பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்.
ddhdh

தேவையான பொருட்கள் :

சமையல் சோடா – 1 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை மூடி
ஆலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன்.

முதலில் சமையல் சோடாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இது முட்டியிலுள்ள சொரசொரப்பை போக்க உதவும்.சமையல் சோடவும் தேனை கலந்து நன்றாக கலக்குங்கள். இது முட்டிக்கு ஊட்டம் அளிக்கும். மிருதுத்தன்மை தரும்.அவற்றுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக பேஸ்ட் போல் ஆனவுடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கலக்குங்கள்.பின்னர் முட்டியில் இந்த கலவையை தேய்த்து அரை மணி நேரம் ஊற விடவும். அதன் பின் கழுவுங்கள்.இதன் பின்னர் கற்றாழையின் ஜெல்லை முட்டியில் தடவி காயவிடவும். இவ்வாறு செய்தால் முட்டியின் நிறம் விரைவில் மாறி பளிச்சிடும். வாரம் ஒருமுறை இதை செய்து பாருங்கள் நிச்சயம் பலன் தரும்.

Related posts

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan

சுவையான தேங்காய் முறுக்கு

nathan

சூப்பர் டிப்ஸ் தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ எப்படி பயன்படுத்தலாம்..!

nathan

கருவளையங்களுக்கான காரணங்கள், தீர்வுகள், லேட்டஸ்ட் சிகிச்சைகள்!…

sangika

ஹெல்த் ஸ்பெஷல்.. தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு தரும் சில கீரைகளின் பங்கு…?

nathan

முகப்பருக்களை விரட்ட…!! வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.

nathan

உங்கள் முகம் அழுக்காக உள்ளதா? இதோ வோட்கா பேஷியல்

nathan

தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்!…

sangika

உதடு சிவக்க

nathan