27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
yrjyf
ஆரோக்கிய உணவு

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது பசலைக்கீரை

* பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால் நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.

* பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உயர் ரத்த அழுத்தத்தினால் உண்டாகும் மோசமான நிலையில் இருந்து பாதுகாக்கும்.

* பசலைக்கீரையில் ஃப்ளேவோனாய்டு என்னும் அத்தியாவசிய பைட்டோ நியூட்டிரியன்ட்ஸ் இருக்கிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அதிகம் உள்ளது. அதிலும் இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
yrjyf
* இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும்.

* ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

* பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.

* பசலைக்கீரையில் உள்ள லுடின், கண்புரை மற்றும் இதர கண் பிரச்னைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

* பசலைக்கீரையில் நல்ல அளவில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் சத்துக்களாகும்.

* மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரி செய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலியைக் குணப்படுத்தும்.

Related posts

வயதுகளுக்கான உணவுப்பழக்கம் மிக அவசியம் …….

sangika

இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் இரத்த அழுத்தம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது என்று அர்த்தம்… எச்சரிக்கையாக இருங்கள்!

nathan

பித்த வாந்திக்கு நிவாரணம் தரும் நார்த்தங்காய் இலை துவையல்

nathan

மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது கிடைக்கும் நன்மை!….

sangika

கறிவேப்பிலையை, தொடர்ந்து, 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள்… !

nathan

முருங்கைக்கீரை சாம்பார்

nathan

50 கலோரிகள் கீழ் உள்ள உணவுகள்

nathan

கொண்டைக்கடலை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

ஒரு டீஸ்பூன் தேன் உருவாக்க, தேனீக்கள் படும் கஷ்டம் இவ்வளவா?!

nathan