தேவையான பொருள்கள்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
மணத்தக்காளி வற்றல் – 50 கிராம்
பூண்டு – 10 பல்
புலி -தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை -தேவையான அளவு
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித் தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரைடீஸ்பூன்
தேங்காய் -இரண்டு பத்தை
மிளகு – 10
சீரகம் – அரை டீஸ்பூன்
தக்காளி-1
நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு

செய்முறை
சின்ன வெங்காயத்தை கட் பண்ணி பூண்டினை தோலுரித்து வைக்கவும்.
தேங்காய் ,மிளகு, சீரகம், இவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, போட்டு தாளிக்கவும். அதில் வத்தலை போட்டு நன்கு வதக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும்.
பின் அனைத்து தூள்களையும் போட்டு வதக்கவும். தக்காளியும் சேர்த்து வதக்கவும். இதனுடன் புளியை கரைத்து ஊற்றி அரைத்தவற்றை போட்டு. நன்கு கொதிக்க வைத்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும். சுவையான மற்றும் மருத்துவ குணமுள்ள மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார்.