26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
17236526b440f5da8be9368c5e1de9493fed6f5a4097060062269884577
ஆரோக்கிய உணவு

நீங்கள் காலை உணவு சாப்பிடாதவர்களா அப்படின்னா இதை படிங்க!

நம் உடலுக்கு தேவையான நாள் முழுவதிற்கும் தேவையான ஆற்றல் காலை உணவிலிருந்தே கிடைக்கிறது. ஆனால் உலக அளவில் காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவெல்லாம்என்று தற்போது பார்ப்போம்.

17236526b440f5da8be9368c5e1de9493fed6f5a4097060062269884577

காலை உணவைத் தவிர்த்தவர்களில் பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம் இயல்பைவிட அதிகமாக இருக்கும்.

காலை உணவு சாப்பிடுபவர்களைவிட, உணவைத் தவிர்ப்பவர்களுக்குதான் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்குமாம்.

உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் ‘டோபமைன்’ மற்றும் செரடோனின் ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை.

உணவைத் தவிர்க்கும்போது, பசியைத் தூண்டக்கூடிய க்ரெலின் ஹார்மோன் மற்றும் ‘சாப்பிட்டது போதும்’ என்ற உணர்வைக் கொடுக்கக்கூடிய லெப்டின் ஹார்மோனின் இயல்பு நிலையிலும் பல மாறுதல்கள் ஏற்படும்.

காலை உணவைச் சாப்பிடாமல் விட்டால் கிருமிநாசினியின் ஆதரவின்றி வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கும் செரிமானச் சுரப்பிகளை உணவு ஆசுவாசப்படுத்தாதபோது, வயிற்றுத் தசைகளில் படர்ந்திருக்கும் மென்படலத்தில் புண்கள் உண்டாக வாய்ப்புண்டு.

மேலும் உணவு எதுக்களித்தல், வயிற்றுவலி, செரிமானத் தொந்தரவுகள் உண்டாகும். முந்தைய நாள் இரவு முதல், அடுத்த நாள் மதியம் வரை நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் நடக்கும் அனைத்து வளர்சிதை மாற்றங்களிலும் பாதிப்புகள் ஏற்படும்.

காலையில் சாப்பிடாமல் தவிர்க்கும்போது, செயல்படுவதற்குத் தேவைப்படும் சக்தி கிடைக்காது. உணவின் மூலம் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் சோர்வும், மந்தமான நிலையும் நம்மைப் பற்றிக்கொள்ளும்.

Related posts

இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்துக் களி

nathan

முருங்கையின் ஒவ்வொரு பாகமும் அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது!!

nathan

வயிற்று உபாதைகளுக்கு ஏற்ற பூண்டு சட்னி -சூப்பர் டிப்ஸ்

nathan

சூப்பர் டிப்ஸ்!குழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில எழுந்ததும் இந்த 5 விதைகளை சாப்பிட்டாலே நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு கூடும்!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரே ஒரு மூலிகை தண்ணீர் போது உடல் எடையை சீக்கிரமாக குறைக்க!

nathan

சத்தான சுவையான கொள்ளு பொடி

nathan

உளுந்தங்கஞ்சி

nathan

உங்களுக்கு தெரியுமா இனிப்பு போளி செய்வது எப்படி?

nathan