27 C
Chennai
Thursday, Nov 14, 2024
atmeal
ஆரோக்கியம் குறிப்புகள்

கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வருவதைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் அதிகம் வாந்தி எடுப்பதால், பெண்களால் சரியாக உணவுகளை சாப்பிட பிடிக்காது. மேலும் சிலருக்கு புளிப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருப்பதால், இரத்தமானது சுண்ட ஆரம்பிக்கும்.

ஆகவே இக்காலத்தில் பெண்களின் உடலில் இரத்தத்தின் அளவானது குறைய ஆரம்பித்து, இரத்த சோகையானது வர ஆரம்பிக்கும். இப்படி கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வந்தால், அது குழந்தைகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகவே பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இங்கு கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வருவதைத் தடுக்கும் உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உணவுகளை உட்கொண்டால், கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக்கும்.

பேரிச்சம் பழம்

கர்ப்பிணிகள் தினமும் இரண்டு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியானது அதிகரித்து, இரத்தத்தின் அளவானது அதிகரிக்கும்.

ஓட்ஸ்
கர்ப்பிணிகள் ஓட்ஸ் சாப்பிட்டால், அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடை அதிகரிக்காமல் இருப்பதுடன், இரத்த சோகை வராமலும் தடுக்கும்.atmeal

உலர் திராட்சை
உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.

ப்ராக்கோலி
கர்ப்பிணிகளுக்கு ப்ராக்கோலி ஒரு சிறப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள். இதனால் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதுடன், கர்ப்பிணிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

வாழைப்பழம்
இரத்த சோகை இருப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

மாதுளை இரத்த சோகையை தடுப்பதில் மாதுளையை விட சிறந்த பொருள் வேறு ஏதும் இல்லை. ஏனெனில் மாதுளையில் மற்ற பழங்களை விட அதிக அளவில் இரும்புச்சத்து இருக்கிறது. ஆகவே இரத்த சோகை வராமல் இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு மாதுளையை கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும்.

Related posts

உங்களுக்கு தொியுமா ? நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பயப்படாமல் இந்த 4 பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்!

nathan

மஞ்சள் பற்கள் வெள்ளையாக்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க…

nathan

இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது…

nathan

நீங்கள் துரித உணவு சாப்பிடுகிறீர்களா? அப்போது கண்டிப்பாக இந்த பிரச்சனை உங்கள் உடலுக்கு ஏற்படும்…!

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த சோகை எற்படுவதற்கான காரணங்கள்?

nathan

ஹை-ஹீல்ஸ் ஆபத்து

nathan

கர்ப்பத்தை தடுக்கும் நீர்க்கோவைக்கு தீர்வு..

nathan

வீட்டுக்குறிப்புகள் டிப்ஸ்.. டிப்ஸ்…

nathan

உடல் பருமன் சுட்டு (Body Mass Index)

nathan