24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
husband scaled
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!! இனியாவது திருந்துங்கள்….

உலகில் உள்ள அனைவருக்குமே ஒருசிலவற்றில் அதிகப்படியான விருப்பம் இருக்கும். அத்தகைய அதிகப்படியான விருப்பதால், அதனைப் பெறுவதற்கும், பின்பற்றுவதற்கும் அதிக ஆர்வம் செலுத்துவதால், நம்முடன் பழகுபவர்களுக்கு அது பொறுமையை இழக்கச் செய்து, சில சமயங்களில் எரிச்சலூட்டும் படியாகவும் இருக்கும். இவற்றில் பெண்களின் செயல்கள் தான் ஆண்களை கோபமூட்டும். உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. இது போன்று பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத செயல்கள் உள்ளன.

வெளியே கிளம்புவதற்கு 10-15 நிமிடம் போதுமானது. ஆனால் பெண்கள் வெளியே கிளம்ப வேண்டுமெனில் குறைந்தது 1 மணிநேரம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதால், ஆண்கள் வெறுப்படைந்துவிடுவார்கள். அதுமட்டுமின்றி, அவ்வாறு கிளம்பி வந்த பின், பெண்கள் தாம் எப்படி இருப்பதாகவும் கேட்பார்கள். அப்போது ஆண்கள் பெண்களின் மனது குளிரும் வகையில் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இநத் நேரம் காத்திருந்ததை விட, கேட்ட கேள்விக்கு சரியாக பதிலளித்தும் பெண்கள் ஒப்புக் கொள்ளாதது, ஆண்களுக்கு கோபத்துடன் எரிச்சலையும் உண்டாக்கும்.

* பெண்களின் செயல்களில் முக்கியமான ஒன்று மேக்-கப் போடுவது. பெண்களுக்கு எங்கு செல்லும் போதும், நன்கு அழகாக பொலிவோடு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் முகத்தை அழகுடன் வெளிப்படுத்துவதற்கு மேக்-கப்பை போடுவார்கள். ஆனால் ஆண்கள் இயற்கை அழகையே விரும்புபவர்கள். சொல்லப்போனால் மேக்-கப் போடும் பெண்களை விட, மேக்-கப் போடாத பெண்களாலேயே ஆண்களை எளிதில் கவர முடியும். ஆகவே அளவான மேக்-கப் போடுவது இயற்கையான அழகை வெளிப்படுத்துவதோடு, கவர்ச்சியாகவும் இருக்கும். husband scaled

* எப்போது டேட்டிங் சென்றாலும், ஆரம்பத்தில் பெண்கள் கூச்சப்பட்டு, பசித்தாலும் அளவாகவே சாப்பிடுவார்கள். ஆனால் அதுவே நன்கு பழகிவிட்டால், நன்கு ஒரு கட்டு கட்டுவார்கள். இவ்வாறு நன்கு எதற்கும் கூச்சப்படாமல் இருப்பவர்களையே ஆண்களுக்கு பிடிக்கும். அதைவிட்டு சரியாக சாப்பிடாமல் இருந்தால், பின் சீன் போடுகிறார்கள் என்று நினைத்து ஆண்களுக்கு மனதில் ஒருவித எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும். அதுமட்டுமின்றி ஆண்களுக்கு எப்போதும் தம்முடன் இருப்பவர்கள், எந்த ஒரு கூச்சமுமின்றி நன்கு வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆகவே எப்போதும் கூச்சப்படாமல் எப்போதும் போன்று நடக்க வேண்டும்.

* பெண்களுக்கு எவ்வளவு தான் வீட்டில் துணிகள் இருந்தாலும், புது ஆடைகள் வாங்குவதில் உள்ள நாட்டம் குறையாது. அதிலும் ஒருமுறை மனதில் வாங்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், என்ன வாங்க வேண்டும் என்று யோசிக்கவே 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த நேரம் மட்டும் ஆண்கள் பெண்கள் கைகளில் மாட்டிக் கொண்டால், பொறுமையையே ஆடையாக அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், சண்டைகள் வந்து வீடே இரண்டாகிவிடும். அதுமட்டுமின்றி, அவர்களுடன் போகும் போது டெபிட் கார்டு போதாது, கூடவே க்ரிடிட் கார்டும் எடுத்து செல்ல வேண்டி வரும்.

* இயற்கையாகவே பெண்களுக்கு சுய அன்பானது அதிகம் இருக்கும். மேலும் எந்த நேரமும் நன்கு அழகாகவே காணப்பட வேண்டும் என்று அழகு மீது அதிக கவனம் கொள்வார்கள். அதனால் தான் அவர்கள் மேக்-கப் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். அதிலும் கூந்தல் என்று வந்துவிட்டால், கூந்தலை எப்படியெல்லாம் ஸ்டைலாக சீவலாமோ, அவை அனைத்தையும் முயற்சித்து பார்ப்பார்கள். அவ்வாறு முயற்சிப்பது தவறல்ல. ஆனால் அது நமது துணைக்கு பிடிக்கிறதா என்று பார்த்து செய்வது நல்லது. ஏனெனில் அவர் தான் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள். ஆகவே அதை மறக்காமல் நடப்பது நல்லது.

மேற்கூறியவாறு பெண்கள் இல்லாமல் இருந்தால், நிச்சயம் அனைத்து ஆண்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

Related posts

வெந்நீரில் உப்பு கலந்து கண்களை கழுவுங்கள்!

nathan

தினமும் எந்தெந்த நேரத்தில் எல்லாம் மறக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் கருமுட்டை வலி எதனால் ஏற்படுகிறது?.! சரியாக என்ன செய்வது?.!!

nathan

இளம் வயதினரை திருமணம் செய்யக்கூடிய 4 ராசிகள்

nathan

useful tips.. விரைவில் கர்ப்பமாக விரும்பும் பெண்கள் இந்த உடற்பயிற்சியை செய்ய

nathan

பெண்கள் நாப்கின் இன்றி தங்களது மாதவிடாய்க் காலத்தைக் கடக்க வேண்டி உள்ளது

nathan

பற்களில் உள்ள கறைகளை நீக்கி வெள்ளையாக்க சில ட்ரிக்ஸ்…!

nathan

ஆடி மாதத்தில் திருமணமான தம்பதிகளை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா இரவு தூங்குவதற்கு முன் நீங்கள் செய்யக் கூடாதவை?

nathan