23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
சைவம்

வாழைக்காய் சட்னி

வாழைக்காய் சட்னி
தேவையான பொருட்கள்:வாழைக்காய் – ஒன்று,
காய்ந்த மிளகாய் – 3,
பெரிய வெங்காயம் – ஒன்று,
சின்ன வெங்காயம் – 10,
பூண்டு – ஒரு பல்,
தக்காளி – 2,
புளி – சிறிதளவு,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு,

தாளிக்க :

கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• தக்காளி, வெங்யாகத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வாழைக்காயை வேக வைத்து, தோலுரித்து, கட்டியில்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

• காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, சோம்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

• அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.

• பின்னர் இதில் நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த மசாலா விழுது, மசித்த வாழைக்காய் போட்டு வதக்கவும்.

• பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் தெளிந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

Related posts

பூண்டு நூடுல்ஸ்

nathan

கொத்தமல்லி புலாவ்

nathan

சுவையான குடைமிளகாய் காளான் மிளகு வறுவல்

nathan

பனீர் 65

nathan

கற்கண்டு பொங்கல் செய்ய வேண்டுமா…

nathan

சோயா பிரியாணி

nathan

சத்தான சுவையான அரைக்கீரை குழம்பு

nathan

பேச்சுலர் சமையல்: வெங்காய சாம்பார்

nathan

குதிரைவாலி அரிசி பிரியாணி

nathan