அன்னாசிப்பழம் மிகவும் அற்புதமான சுவையான ஒரு பழம். அன்னாச்சிப்பழத்தில் ப்ரோமெலைன் நொதிகள், அஷ்காபிக் அமிலம், வைட்டமின் சி, மாங்கனீசு, தயமின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
பித்தத்தை தணிக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் அனைத்தையும் கொண்டு உள்ளது. தினம் சாப்பிட உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து நம்மை பராமரிக்கும். நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை கொடுத்து வலிமை பெற செய்கிறது.
இரத்த குறைபாடுகளால் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் அன்னாசிப்பழத்தில் இருக்கும் சத்துக்களை கொண்டு பூர்த்தி செய்யலாம்.
சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை பாலுடன் சேர்த்து நன்கு ஊறிய பிறகு குடிக்க வேண்டும், இதனை தினம் குடித்து வந்தால் நோய்கள் நம்மை அணுகாது.
அன்னாசி பழத்தை நாம் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள சிக்கலான புரதங்களை உடைத்து, வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது.